பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கல்லவை ஆற்றுமின் எனவே அக்காலத்தில் சம்பந்தர்தான் முதல் முதல் விநாயகர் பற்றித் தம் தேவாரத்தில் குறிப்பிட்டார் என்பது பொருந்தும். சம்பந்தர் காலத்தில் செந்தமிழில் திருக்கோயிலில் வழி பாடு நடந்ததென்றும் (3.80.4) அனைவரும் மலர் தூவி இறைவனை வழிப்பட்டனர் என்றும் (3-79-2, 1-32-2, 1-64-5, 1-85-1) பல்வேறு வகைப்பட்ட வண்ணப்பாடுகளும் சுண்ண வேலைகளும் திருக்கோயில்களில் சிறந்திருந்தன என்றும், பல்வேறு விழாக்கள் திங்கள்தோறும் நடைபெற்றன என்றும் அவர்தம் பாடல் வழி அறிகிறோம். இக்காலத்தில் வழக்கிழந்த பல அரிய சொற்களும் இலக்கண வழக்குகளும் இவர்தம் பாடல்களில் உள்ளன. இவர்தம் பாடல்களில், தமிழ்நாதன் ஞானசம்பந்தன் (3.39-11) தமிழ் ஞான சம்பந்தன் (1-15-11) (1.131-11) கலை ஞான சம்பந்தன் (1-16-11) திருநெறிய தமிழ் (1-1-11) ஞான சம்பந்தன் செந் தமிழ் (I-135-11) தமிழ்க் கிளவி பத்தும் (2-31-11) தமிழ் மாலை பத்தும் (2-35-11) செந்தமிழ் மாலை (2.48-11) குற்றமில் செந்தமிழ் (I-113-11) குன்றாத் தமிழ் (1-18-11) என்று வரும் தொடர்கள் இவர் தம்மைத் தமிழ் விரகராய்கலைவல்லவராய்க் காட்டுவதோடு, இவர்தம் பாடல்களும் நல்லதமிழ்ப்பாடல்கள் என நமக்கு அறிமுகம் செய்து வைக் கின்றன. திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதும் பெரும் சமயப் புரட்சி செய்தவர் என்பதும் இறை யருளால் பல அற்புதங்கள் நிகழ்த்தியவர் என்பதும் அக்காலக் கோவில் அமைப்பு, வழிபாட்டுமுறை, வாத்திய ஒலி, பிறவகை முறைகள் இவற்றைத் தம் பாடல் வழிப் படமெடுத்துக் காட்டியவர் என்பதும். அக்காலச் சமுதாய வாழ்வைச் சித்தரித்தவர் என்பதும் அக்காலத் தமிழக