பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவையார் 63 சொல்ல முடியும்? அக்காலத்தில் எண்ண முடியாத எத்தனையோ மாறுபாடுகள் நிகழ்ந்துள்ளன. சங்ககால இலக்கிய அமைப்புக்கும் பின் தெளிந்த தேவார காலத்து இலக்கிய அமைப்புக்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. எனவே மாணிக்கவாசகர் தம் பாவகைகள் அந்த இருண்ட கால இலக்கிய மாற்றத்தால் அமைந்தவை எனக் கொள்ள லாம். மேலும் மணிவாசகர் புத்தரை வாதில் வென்றவர் எனப் பெறுவதாலும் மகாவம்சம் இதைக் குறிப்பதாலும்' தமிழகத்தே புத்த சமயம் தழைத்தோங்கிய கி. பி. மூன்று நான்காம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்தார் என்பது பொருந்தும். மலையாளச் செப்புப்பட்டயம் ஒன்றும் மூன்றாம் நூற்றாண்டில் இவர் இந்தியக் கிறித்தவரைச் சைவ ராக்கினார் என்றும் குறிப்பிடுகிறது.2 எனவே மணிவாசகர் கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டினர் என்பது உறுதி செய்யப் பெறுகின்றமையின் இத்திருக்கோவையாரும் அக்காலத்தியதே யாகும். சிலர் மாணிக்கவாசகர் இத்திருக்கோவையாரை இயற்ற வில்லை எனவும் சிவபாத்தியர் என்ற ஒருவர் எழுதினார் என்றும் கூறுவர். ஆயினும் அவர்தம் கூற்றுக்கு ஆதாரம் இல்லை. மேலும் திருக்கோவையாரில் வரும் தில்லைக் கூத்தனைப் பற்றிய பல தொடர்கள் திருவாசகத்தை நமக்கு நினைவூட்டுகின்றன. வேறு அடைமொழி இன்றி திரு ஒன்றி னாலேயே இரண்டும் குறிக்கப் பெறுவதும் எண்ணத் தக்கது, மற்றும் திருவாசகத்தில் குறிக்கப்பெறும் பல முக்கிய தலங்கள் இதிலும் குறிக்கப் பெறுகின்றன. கழுக்கன்று (170) குற்றாலம் (94,135) ஈங்கோய்மலை (113) திருப்பனையூர் (137) பரங் குன்று (144, 178, 279, 292) இடைமருது, ஏகம்பம், வாஞ்சியம் (268) திருப்பூவணம் (300, 338) ஆகிய தலங்கள் இத்திருச்சிற் 1, 2. சமாச வெளியீடு.4 (1932) 8, 9ஆம் திருமுறை பக்கம் 8,