பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கல்லவை ஆற்றுமின் இலக்கியமாகிய சீவக சிந்தாமணியில் ஈடுபாடு கொண்டிருந் தான். சேக்கிழார் அவனுக்கு அடியவர் பெருமையை விளக்கிச் சொல்ல, அரசன் அதைக் காவியமாக்கித்தர வேண்டுமெனக் கேட்டுக்கொண்டான். இவரும் தில்லையில் உள்ள கூத்தப் பெருமான் முன் நின்று பாடத் தொடங்க அருள் வேண்ட, இறைவனே உலகெலாம் என்று அடி எடுத்துக் கொடுத்தார் என்பதும் பின் தொடர்ந்து இப்பெரு நூலை இவர் பாடி முடித்தார் என்பதும் வரலாறு. நிறை வுற்றபின் சோழமன்னன் தில்லை வந்து சிறந்த வகையில் அரங்கேற்றி இந்நூலை, தான் போற்றியதோடன்றி, உலகறியச் செய்தான். பின்னர் இப்பெரு நூல் சைவ இலக்கிய வரிசையில் பன்னிரண்டாம் திருமுறையாக அமைக்கப்பெற்று, தேவாரம் திருவாசகம் போன்ற நல்ல தோத்திர இலக்கியங்களோடு இணைந்து சைவ உலகில் சிறந்து போற்றப் பெறுகின்றது. இந்நூல் இலக்கண மரபுப்படி சார்புநூல் என்பர். ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர், திருவாரூரில் அடியவர் பெருமையினைத் 'திருத்தொண்டத் தொகை" யாகப் பாடினார். இதை முதலாகக் கொண்டு பின்வந்த திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி என எண்பத்தொன்பது பாடல்கள் பாடி யுள்ளார். அதில் தனியடியார், தொகையடியார், பற்றிக் கூறி, பின் பதிகக் கவிகளின் முதல் குறிப்பு (திருத்தொண்டத் தொகை அடிப்படையில்) முதலியவற்றையும் குறித்துள்ளார். இதை வழிநூலாகவும் திருத்தொண்டத் தொகையினை முதல் நூலாகவும் (பாசுரம்) கொண்டு, சேக்கிழார் தம் பெரிய புராணத்தை இயற்றினார். எனவே இது சார்புநூல் எனப் பெறுகின்றது.