உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நல்லவை ஆற்றுமின் இலக்கண மரபிற்கு ஏற்ப திருநகரச் சிறப்பு. நாட்டுச்சிறப்பு எனக் காட்டப்பெற்றுள்ளன. பின் சுந்தரர் போற்றும் திருத் தொண்டர் பெருமை கூறப் பெற்று, அடுத்து சுந்தரர் வரலாறு தடுத்தாட்கொண்ட புராணத்தால் தொடங்கப் பெறுகின்றது. அவ்வரலாற்றில் அவர் திருவாரூரில் அடிய வரைப் பாடிய திருத்தொண்டத்தொகை' வரையில் எழுதி, பின் அவர் பாடிய நாயனார் பலர்தம் புகழைப்பாடுகின்றார். சேக்கிழார் (ஒவ்வொன்றும் தனித்தனியே புராணம் என்று அமைகின்றது) இங்கே திருத்தொண்டத் தொகைக்கும் இறைவன் 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடிஎடுத்துக் கொடுத்தமை எண்ணத் தக்கது. பின் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத் திலும், சேரமான் பெருமாள் நாயனார் புராணத்திலும், கடைசியில் சடையனார் இசை ஞானியார் என்று அவரைப் பெற்ற தாய் தந்தையரை நினைந்தும், இறுதியாக வெள்ளி யானைச் சருக்கத்திலும் அவர் வரலாற்றைக் கயிலாயம் சென்ற வரையில் காட்டி முடிக்கிறார். தொடக்கத்திலும் அவர் கயிலையிலிருந்து வந்து உலகில் பிறந்த காரணத்தையும் இருவரை மணக்க இருந்த நிலையினையும் திருமலைச் சருக்கம் என்ற முதல் சருக்கத்தில் காட்டுகிறார். எனவே தொடக்கமுதல் தொடர்ந்து இறுதி வரை இணைந்துநிற்கும் வரலாற்றின்படி சுந்தரரே இக்காப்பியத் தலைவராகின்றார். எனவே இது பெருங்காப்பியமாகும். சேக்கிழார் சோழப் பேரரசரின் சிறந்த அமைச்சராக இருந்த காரணத்தால், தம் வரலாறுகளில் வரும் அடியவர் கள் வாழ்ந்த-சென்ற இடங்கள் பலவற்றிற்கும் தாமே நேரில் சென்று பல செய்திகளைச் சேகரித்தார் என்பது அறியத்தக்கது. பல இடங்கள் பற்றிய விளக்கங்களும் வழித் துறைகளும் அவ்வழிகளிடையில் அமைந்த திருத்தலங்களும் அவற்றின் சிறப்புக்களும் அவர் நேராகக் கண்டு எழுதிய