உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ገ0 கல்லவை ஆற்றுமின் இவர்தம் புராணம் இல்லையாயின் பெரியபுராணத் தோற்றம் பற்றியும் பிற சிறப்பியல்பு, வரலாறு முதலியன பற்றியும் தெளிவாக அறிய முடியாது. தமிழிலேயே முதல் முதல் மொழி பெயர்ப்பற்ற வகையில் விருத்தப்பாவில் விரிந்த நூல் செய்தமையால் சேக்கிழாரை 'நன்னூலாசிரியர்' என்றும் தேவாரம் முதலிய பாசுரங்களும் அவற்றுக்குரிய மூவர் வரலாற்றை விரித்துக் கூறும்போது உரைவிளக்கம் போலப் பாடியதால் உரையாசிரியன் என்றும் இன்னும் பல வகையாலும் இந்நூலையும் ஆசிரியரையும் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் பாடிய மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் பாராட்டியுள்ளனர். மேலை நாட்டிலிருந்து வந்த போப்பாதிரியாரும் இவர் நூலைப் போற்றியுள்ளார். ஏறக் குறைய நூறு ஆண்டுகளுக்குமுன் இத்நூலைப் பதிப்பித்த யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்கள் ஒவ்வொரு புராணத்துக்கும் சூசனம் எழுதியுள்ளார்கள். சூசனம் என்பது அந்தந்த வரலாற்றால் நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையும் போதனையும் கலந்த ஒன்றாகும். ஆயினும் முற்றும் எழுதுவதற்குள் நாவலர் மறைந்துவிட்டார். காரைக்கால் அம்மையார் புராணம் வகையிலேயே சூசனம் உள்ளது. எழுதியவற்றுள்ளும் சில திருத்தங்கள் செய்ய நினைத்திருந்தவர் முற்றும் எழுத முயன்றவர் இடையில் மறைய, சூசனம் இடையில் நின்று விட்டது. திரு.வி.க அவர்கள் இந்நூலுக்குக் குறிப்புரை ஒன்று எழுதி வெளியிட்டுள்ளனர். கோவை சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார் அவர்கள் விரிந்த உரையும் தந்துள்ளனர். சேக்கிழார் நாட்டுப்பற்றும் இனப்பற்றும் மிக்கவர் என்பது பெரியபுராணத்தால் நன்கு விளங்கும். தம் தொண்டைநாட்டில் வாழ்ந்த திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தைப் பாடும்போது, அந்த நாட்டின் வளத்தினையும்