உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கல்லவை ஆற்றுமின் மாவட்டப் பழைய அரசிதழ்-Guzzeeter) ஆயின் உண்மை வெளிப்படும். நந்தனார் வாழ்ந்து ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன. இந்த இடைவெளியில் பல ஊர்களின் பெயர்கள் உருமாறி உள்ளன. மயிலாடுதுறை, மறைக்காடு, தில்லை போன்றவை சான்றாகும். எனவே மேற்கா நாடு, கீழ்க்கா நாடு போன்றவையும் மாறி இருக்கலாம். அவ்வாறு மாறுவது இயற்கை என்பதை மொழி நூற் புலவர்களும் ஆய்ந்து கண்டுள்ளனர். என்றாலும் ஆதனூர் என்ற பெயர் இன்னும் வழக்கத்தில் உள்ளது. அக்காலத்தில் நாடு, மண்டலம், கோட்டம், வட்டம், நாடு, நாட்டாண்மை என ஒன்றினுள் ஒன்று அடங்கிய பிரிவுகளாகப் பிரிக்கப் பெற்றிருந்தமை வரலாற்று உண்மையாகும். நாடு' என்பது கோட்டம் அல்லது வட்டத்தின் உட்பிரிவாகும். நான் வைத்தீஸ்வரன் கோயில், திருப்புன்கூர் ஆகிய இடங்களுக்குச் சென்ற போது அங்குள்ளார் அனைவரும் நந்தனார் பிறந்த ஊர் அருகே உள்ளதெனக் கூறினர். (நான் விரைந்து பூம்புகார் செல்ல நேர்ந்தமையின் அவ்வூரைச் சென்று காண விழைந்தும் காலமின்மையால் திரும்பி விட்டேன்,) சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் திருப்புன்கூர் நந்தி விலகியதைக் குறிக்கின்றார். (பாடல் 16) அதற்கு முன் நான்கு பாடல்களிலே நந்தனார் கோயில்தோறும் (13) கோயில்களின் திருவாயில் புறத்தும் (13) பறை திருமஞ்சம் முதலியவற்றிற்கு உரிய தோல், கோரோசனை முதலியன தந்து வந்தார் எனச் சேக்கிழார் குறிக்கின்றார். தம் ஊரில் இருந்து கொண்டே, தம் கடமையைவிடாதும் பல கோயில் களில் கடவுள் தொண்டும் செய்யும் அந்நாளில்தான் திருப்புன் கூர்,சென்றார் என்கின்றார். எனவே நந்தனார் பிறந்த ஊர் திருப்புன்கூருக்கு அருகே இருக்க வேண்டுமேயன்றி, சில காத தூரம் கடந்த நிலையில் இருக்க இடமில்லை. அப்படியே காட்டு