பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்காடு-சக்திவேற்காடே 77 மூன்றாம் நூற்றாண்டின் வாழ்ந்த சோழப் பெருமன்னன் 'எண்தோளிசர்க்கு எழில்மாடம் எழுபது செய்தோன் எனப் பேசப் பெறுகின்றான். அதற்குமுன் தல விருட்சங்களின் கீழே தங்கி அருள்புரிந்த இறைவனுக்கு, அவனும் அவன் வழி வந்த தமிழகப் பெருமன்னரும் ஊர்தோறும் பலப்பல கோயில் களைப் பலப்பல வகையில் நிறுவி, சைவத்தையும் வைணவத் தையும் வளர்த்தனர். பின்வந்த வடுகரும் பிறரும் மேலை நாட்டவரும் அத்தெய்வநிலைக் களன்களைப் போற்றிப் புரந்தனர். இன்று நம்மை நாமே ஆளுகின்ற நிலையிலே நம் சமயம் அந்த அளவில் மன்னர்களால்-தலைவர்களால்ஆட்சியாளர்களால் போற்றி வளர்க்கப் பெறுகிறதா என எண்ண வேண்டியுள்ளது. எனினும் பொதுமக்களும் ஆங்காங்கே உள்ள தம்மை மறந்து சமயத்தொண்டு செய்யும் நல்லவர்களும் தொன்மை நெறி வாழ வழி காணுகின்றமை ஒரளவுக்கு மனத்துக்கு அமைதி தருகின்றது. அந்த வகையில் தவத்திரு சுவாமி இராமதாசர் அவர்கள் முயற்சியால் நம் திருவேற்காடு திருக்கோயில்கள் செப்பம் செய்யப் பெற்று குடமுழுக்கும் நடக்க ஏற்பாடு செய்யப் பெறுவது போற்றுதற் குரியது. திருவேற்காடு தொன்மை வாய்ந்த தலமாகும். ஏழாம் நூற்றாண்டில் ஞான சம்பந்தப் பெருமானால் பாடப் பெற்று பெருஞ் சிறப்பு வாய்ந்தது. தேவாரம் பாடிய மற்றைய இருவர்களாகிய அப்பரும் சுந்தரரும் இவ்வழியாகச் சென்றிருக்கின்றார்கள். இருவரும் ஒரு சில இடங்களில் தங்கியபோது அதைச் சுற்றியுள்ள தலங்களையும் தரிசித்தனர் என்று சேக்கிழார் பாடுகின்றார். திருநாவுக்கரசர் திருப்பாச்சூரில் தங்கியிருந்த காலத்தே பல பதிகளுக்குச் சென்று இறைவனை வணங்கிய தன்மையினை,