பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற் காடு-சக்திவேற்காடே 81. வரந் தந்தான் என்பர் கச்சியப்பர். தாவிலாத நம் சக்தி என்கின்றார். அவருக்குரிய சக்தி என்பதை நம் என்ற சொல்லாலும் அந்த அருட்சத்தியும் தன்னைப் போல் என்றும் உளநிலையினை தாவிலாத என்ற சொல்லாலும் தெளிய வைக்கின்றார். அறுமுகன் கையில் உள்ள வேல் அருட்சத்தி வேலன்றே, அத்தகைய அருட்சக்தியாகிய வேல் சூரபதுமன்மேல் சென்ற செயலைக் கச்சியப்பர், தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு 螺 ஞாலதது, ஆயிரங்கோடி அண்டத்து அங்கியும் ஒன்றிற் றென்ன மீயுயர்ந் தொழுகி அன்னோர்வெருவருங் தோற்றங்கொண்டு நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்த தன்றே' (சூரபது வனை 481) என்கின்றார். இங்கும் நரயகன் தனது தெய்வப்படைக்கலம்’ என்று திரிபுரம் எடுத்த விரிசடைக் கடவுளின் சக்தியாகிய தெய்வப்படைக்கலம் என்பதை நினைவூட்டி, முன்வரம் பெறுபடலத்தில் குறித்த தாவிலாத நம் சக்தி' என்ற தொடரை எண்ண வைக்கிறார். ஆயிரத்தெட்டு அண்டங்களை நூற்றெட்டுயுகங்கள் ஆண்ட குருபதுமனை முன்னிறுத்தி, அடுத்த அண்ட கோசப் படலத்தில் அண்டங்களின் அளப்பரிய எல்லையினையும் தொல்லை நிலையினையும் எண்ணலாகா இயையினையும் விளக்குகிறார் கச்சியப்பர். அதில் கோடியில் ஒரு கூறு கூட இன்றைய விஞ்ஞானிகள் கண்டு தெளியவில்லை. அண்மையில் ஒரு நாளிதழ் அறிவியல் ஆய்வாளர்கள் பல அண்ட கோளங் கள் உண்டென்று கூறியதையும் அவற்றுள் எண்ணற்ற கோளங்கள் உருண்டு கொண்டே இருப்பதையும் அவற்றின்