பக்கம்:நல்ல சேனாபதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல சேனபதி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பழையகோட்டை என்ற ஊர் இருக்கிறது. அங்கே இருக்கும் கொங்கு வேளாளத் தலைவருக்குப் பழைய கோட்டைப் பட்டக் காரர் என்று பெயர். கொங்கு வேளாளர்களின் நலம் கருதி, நாட்டாண்மை செலுத்தும் பரம்பரையினர் அவர்கள்.

முன் காலத்தில் அந்த ஊருக்குக் காரை என்ற பெயர் வழங்கியது. நத்தக்காரையூர் என்று உலக வழக்கில் அதனைச் சொல்வார்கள். சில நூற்ருண்டு களுக்கு முன் அவ்வூரில் சர்க்கரை மன்ருடியார் என்ற தலைவர் வாழ்ந்து வந்தார். மன்ருடியார் என்பது குலப் பெயர். மன்று என்பது நியாய சபைக்குப் பெயர். தம் குலத்தினர்களின் வழக்கைத் தீர்க்கும் சிறப்பால் அந்தப் பெயர் வந்தது. சர்க்கரை என்பதே இயற்பெயர்.

சர்க்கரை மன்ருடியார் பெரிய செல்வர்; பெருவீரர். அவருடைய செல்வம் தமிழ் நாட்டுப் புலவர்களுக்குப் பயன்பட்டது. அவரது வீரம் தமிழ் நாட்டுப் புரவலர் களுக்குத் துணை நின்றது. மன்ருடியார் குலத்தில் உதித்த யாருமே நாட்டுக்கு நலம் செய்யும் இயல்புடை யவர்கள். அவர்கள் நா அசைத்தால் நாடு அசையும். சிறந்த வீரர் கூட்டம் ஒன்று எப்போதும் அவர் களுடைய ஆணையின்படி ஒழுகக் காத்திருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/10&oldid=583973" இலிருந்து மீள்விக்கப்பட்டது