உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் வேலி அதம்பார் 33

"ஆயிரம் வேலி அதம்பார் ஆன கட்டும் தாள் வானம் முட்டும் போர்

என்று அந்தப் பழமொழி முழுவதையும் சொன்னர். முன்னே அமர்ந்திருந்த செல்வருக்குக் கண்கள் சிவந்தன. ஆனல் கணக்கப் பிள்ளை அதனோடு நிற்க வில்லை. மேலேயும் அந்தப் பழமொழியோடு புதுமொழி யைச் சேர்த்துச் சொல்லத் தொடங்கினர். "நிலம் என்னவோ வளம் பொருந்தியதுதான். ஆனல், அந்த விளைச்சலால் உண்டாகும் பயன்தான் சரியாகக் கிடைப் பதில்லை” என்று காட்டும் புது மொழியைச் சேர்த்தார்.

"ஆயிரம் வேலி அதம்பார், ஆனே கட்டும் தாள், வான முட்டும் போர் ;

ஆறு கொண்டது பாதி, தூறு கொண்டது பாதி ,

கொட்டாங்கச்சியில் நெல்லு, குடங்கையிலே வைக்கோல்.

ஆயிரம் வேலிதான். ஆனை கட்டும் தாள்; போர் போட்டால் வானத்தை முட்டும். ஆனல் இப்போது என்ன கிடைக்கிறது தெரியுமா? ஆற்ருல் அரிப்புண்டு நிலம் வீணுகிறது. தூறுகள் அடர்ந்து வீணுகும் நிலம் வேறு. இவை போக மிஞ்சுகிறது கொட்டாங்கச்சியில் நெல். வைக்கோல் ஒரு பிடித்த பிடி, உள்ளங்கையில் பற்றிப் பிடிக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது. (குடங்கை - உள்ளங்கை) . . . . . . . . . . . . . .

செல்வரே அயர்ந்து போனர். பயல் என்ன இருந் தாலும் கெட்டிக்காரன்! என்று மனத்துக்குள் வியந்து கொண்டர்ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/102&oldid=584065" இலிருந்து மீள்விக்கப்பட்டது