உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுத் தாலி 97

தையும் கண்டார். எல்லாம் மருத பாண்டியருடைய அறச் செயல்கள் என்பதைக் கேட்டார். இதற்கு முன்னும் அவருடைய புகழை ஓரளவு கேட்டு உணர்ந் திருந்தாலும், இப்போது அவருடைய இயல்புகளைப் பற்றி நன்ருகத் தெரிந்துகொண்டார். அவர் புலவர் களுக்கு மதிப்பளிப்பவர் என்பதை அறிந்தபோது புலவருக்கு ஒரு விருப்பம் எழுந்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இப்படியே சிவகங்கைக்கும் போய் அந்த வள்ளலைப் பார்த்துவிட்டு வரலாம் என்று எண்ணினர். அந்த ஊருக்குப் போகும் வழியை விசா ரித்து வைத்துக்கொண்டார். சிவகங்கையிலிருந்து குன்றக்குடிக்கு அடிக்கடி வண்டிகள் வரும். மருத பாண்டியர் சில சமயங்களில் குதிரையில் ஏறி வருவார். அவ்வாறு வரும் வழி ஒன்று இருந்தது.

இவற்றையெல்லாம் அறிந்துகொண்ட புலவர் தம் மனைவியுடன் சிவகங்கையை நோக்கிப் புறப்பட்டார். இடையிலே சில ஊர்களில் தங்கிச் சென்ருர். கடைசி யில் சிவகங்கைக்கு அருகில் உள்ள ஓர் ஊரை அடைந் தார். அங்கே பகலில் உணவு கொண்டு இளைப் பாறினர். அன்றே சிவகங்கைக்குப் போய்விட வேண் டும் என்னும் ஆவல் அவருக்கு எழுந்தது. மெல்ல நடந்து போய்விடலாம் என்று நினைத்தார். அவர் தனியே இருந்தால் யோசனை செய்யாமல் புறப்பட் டிருப்பார். தம்முடன் தம் மனைவியையும் அழைத்துச்

செல்வதல்ை சிறிதே தயங்கினர்.

அப்போது நிலாக் காலம். ஒருகால் சூரியன் மறைந்தாலும் நிலா ஒளியில் வழிகண்டு, போய்விட லாம் என்ற தைரியம் அவருக்கு இருந்தது. வழியில் யாரேனும் திருடரால் பயம் உண்டானுல் என்ன செய்வது? என்ற அச்சம் அவர் மனைவிக்கு வந்தது.

西一7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/106&oldid=584069" இலிருந்து மீள்விக்கப்பட்டது