பக்கம்:நல்ல சேனாபதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நல்ல சேனுப்தி

'அட பாவிகளா!' என்று கதறிக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள் அந்தப் பெண்மணி. புலவருக்குச் சிறிது நேரம் ஒன்றும் தோன்றவில்லை. பிறகு மெல்லத் தம் மனைவியைத் தூக்கி நிற்கச் செய்தார்.

'இந்த அக்கிரமம் எங்காவது நடக்குமா?’ என்று புலம்பினுள் அவள். "அந்தக் குன்றக்குடி முருகன் கண் இல்லாமல் போய்விட்டான?” என்று கூவிள்ை.

புலவர் அவளுக்கு ஆறுதல் கூறினர். "நல்ல வேளை ! நம்முடைய உயிருக்கு ஆபத்து நேராமல் இருந்ததே, அதுவே ஆண்டவன் திருவருள்தான்” என்று சொல்லித் தேற்றினர். “இந்த நடுவழியில் நின்று கொண்டு இனி என் செய்வது? திரும்பிப் போகவும் இடம் இல்லை. வந்தது வந்துவிட்டோம். பல்லைக் கடித்துக்கொண்டு சிவகங்கைக்கே போய்விடுவோம்" என்ருர்,

அவர்கள் மறுபடியும் நடக்கத் தொடங்கினர்கள். நள்ளிரவில் சிவகங்கையை அடைந்து அங்கே ஒரு வீட்டின் திண்ணையில் தங்கினர்கள். இரவு முழுவதும் தூங்கவே இல்லை. புலவருடைய மனைவி அழுது கொண்டே இருந்தாள்.

விடிந்தது. தன்னுடைய கணவன் அருகில் இருக்கும்போதே தாலியை இழந்த வேதனையைச் சகிக்க முடியாமல் புலவர் மனைவி திண்ணையோரத்தில் ஒன்றிக்கொண்டிருந்தாள். புலவர் மெல்ல அவளை எழுப்பி அங்கே உள்ள சத்திரம் ஒன்றை அடைந் தார். அவளை அங்கே இருக்கச் செய்துவிட்டுப் பாண்டி யரைப் பார்த்துவரப் புறப்பட்டார்.

வேறு சமயமாக இருந்தால் அவர் மருத பாண்டி/ ரைப் பற்றிப் பல பாடல்களைப் பாடிக்கொண்டு போயி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/109&oldid=584072" இலிருந்து மீள்விக்கப்பட்டது