உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்ல சேனபதி 8

    ஒருநாள் நத்தக்காரையூரிலிருந்து சர்க்கரைமன்ரறாடியார் வந்திருந்தார். பாண்டியனும் அவரும் அளவளாவிக் கொண்டிருந்தனர் பேச்சின் இடையே பாண்டியன், 'செல்வத்தை வைத்திருப்பவர்கள் அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் சிறப்பாகுமா?’ என்று கேட்டான்.
      "செல்வம் ஈவதற்கும் நுகர்வதற்குமே உரியது. அதை வைத்துப் போற்றும் உலோபியைப் போன்ற பைத்தியக்காரன் வேறு ஒருவனும் இல்லை” என்றார் சர்க்கரை.
      பாண்டியன் சற்றே புன்முறுவல் பூத்தான் "செல்வம் என்று பொருட் செல்வத்தை மட்டும் சொல்வதில்லை. கல்வி, வீரம், கருணை ஆகிய எல்லாமே செல்வந்தான். இவற்றுள் எதுவானுலும் அதைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதன் பெருமை மங்கிவிடும்.”
     "உண்மைதான்." 
     "முக்கியமாக ஆடவர்கள், நாட்டுத் தலைவர்கள் தம்முடைய வீரத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது பணத்தைப் புதைத்து வைப்பது போன்றதுதான்' என்று பாண்டியன் சொல்லும்போது, மீண்டும் புன்னகை பூத்தான்.
      "சற்றே தெளிவாகச் சொல்ல வேண்டுகிறேன்."
    "உங்கள் வீரம் நாடு அறிந்தது. நீங்கள் விரலை அசைத்தால் மறுகணமே தம் வீரத்தைக் காட்ட முன் வரும் படையின் பெருமையையும் பலர் அறிவர். அப்படி இருந்தும், அந்த வீரம் பயன்படாமல் ஒடுங்கி நிற். கிறது.”

"எப்படிப் பயன்பட வேண்டும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/12&oldid=1406632" இலிருந்து மீள்விக்கப்பட்டது