உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நல்ல சேனபதி

"என் நகைகள் இவை; என் பிறந்தகத்திலிருந்து கிடைத்தவை; ஆதலால் இவற்றைக் கொடுக்க முன் வந்தேன். அன்றியும் உன் அண்ணு இதைக் கேட்டால் மகிழ்வாரே யன்றி வருத்தப்பட மாட்டார்.”

"இப்போதே இப்படிச் செய்யாமல் ஊருக்குப் போய் அவருடன் கலந்து கொண்டு, வேறு வகையில் நீ நினைத்த காரியத்தைச் செய்திருக்கலாமே; இவ்வளவு அவசரம் எதற்கு?”

"அப்படி அன்று. நல்ல காரியம் செய்யும் எண்ணம் எப்போது உண்டாகிறதோ, அப்போதே அதைச் செய்துவிட வேண்டும். சற்றே தாமதம் செய்தால் அந்த எண்ணமே மாறிப் போனலும் போகும்.”

"இப்படிச் செய்ய என் பரிகாசப் பேச்சு இடம் கொடுத்ததே என்று நான் வருந்துகிறேன்.”.

'வருந்துவதா? நீ இந்தப் புண்ணியத்திற்குக் காரணம் ஆளுய். உனக்கும் இதில் பங்கு உண்டு. நீ என்னவோ பரிகாசமாகத்தான் பேசிய்ை. ஆனல் அந்தப் பேச்சினூடே இறைவன் திருவருள் இருந்து, இது செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை எனக்கு உண்டாக்கியது.” .

இப்போது அந்த இளம் பெண்ணுல் பேச முடிய வில்லை. அவள் உள்ளம் உருகியது. அவளும் தன் கை வளைகளைக் கழற்றினுள்; 'அண்ணி, உண்மையில், இந்தப் புண்ணியத்தில் எனக்கும் பங்கு இருக்கட்டும்” என்று முன் இருந்த அணிகலக் குவியலின்மேல் அவற்றை வைத்தாள். r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/121&oldid=584084" இலிருந்து மீள்விக்கப்பட்டது