உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தல்ல சேஞபதி

கொங்குப் படை முதலில் செய்ய வேண்டி நேர்ந்தாலும் நேரலாம்.” -

இருவரும் தங்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். பாண்டியனுடைய விருப்பத்தின் படியே சர்க்கரை மன்ருடியார் தம் படை வீரர்களைத் தொகுத்து, அப் படைக்குத் தாமே சேணு பதியானுர்.

பாண்டியன் சர்க்கரை மன்ருடியாரின் மதிப்பை நன்கு உணர்ந்தவளுதலின் அவரை உரிமையை உடைய தனி வீரராகவே எண்ணிப் பழகி வந்தான். வேறு ஒரு படையின் பகுதியாக இருப்பதால், எந்த விதமான இழுக்கும் இல்லை என்ற எண்ணம் கொங்குப் படை வீரர்களுக்கு உண்டாயிற்று.

2

- கொங்குப் படை ஒன்று பாண்டிப் படையில் உரு வாகிறது என்ற செய்தி இன்னும் வெளி நாடுகளுத்குத் தெரியாமல் இருந்தது. அப்போது ஒரு நாள், நத்தக் காரையூருக்குச் சோழனிடமிருந்து ஒரு தூதுவன் வந் தான். சர்க்கரை மன்ருடியாருக்குச் சோழனிடமிருந்து ஓர் ஓலை கொண்டு வந்திருந்தான். பல் கால்மர்க அந்தக் குடியினர் சோழனுக்குப் படைத் துணையாக இருந்தனர் என்றும், இப்போதும் அப்படிச் செய்தால் தக்க ஊதியம் கிடைக்கும் என்றும், கொங்கு நாட்டு ஆட்சியே கிடைக்கும்படி செய்வதாயும் ஒலை கூறிற்று. அதைக் கண்ட மன்ருடியாருக்குச் சிரிப்பு வந்தது. “என்னிடம் கூலிப்படை ஒன்றும் இல்லை' என்று மறு. மொழி சொல்லி அனுப்பி விட்டார். . . . . . இதனைச் சோழன் எதிர்பார்க்கவில்லை. மறுபடியும்

ஒலை போக்கினன். "என் விருப்பப்படி நடவாவிடில்

கொங்கு நாட்டின்மேல் படையெடுத்து அழித்து விடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/15&oldid=583978" இலிருந்து மீள்விக்கப்பட்டது