உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல செனபதி 9

குறுக்கே பேசலாமா? அவர்கள் சொல்வதையெல்லாம் சொல்லட்டும் என்று இருக்கிறேன்' என்ருர் அவர்.

"உங்கள் கருத்துத்தான் மிகவும் முக்கியமானது. இப்போது வந்திருக்கும் ஆபத்து உங்கள் நாட்டுக்குத் தான்' என்ருன் பாண்டிய மன்னன்.

"உங்கள் நாடு, எங்கள் நாடு என்ற வேற்றுமைக்கே இடம் இல்லை. பொதுவாகப் பாண்டிய நாட்டுக்கு வந்த ஆபத்து என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். மன்னர் பெருமான் ஆட்சியில் அமைந்த நிலப் பகுதி முழுவதும் ஒரே உடம்பு போன்றது. அதில் எந்த மூலை யில் தீங்கு நேரினும் அதைப் போக்க யாவருமே முற்பட வேண்டும். அன்றியும், இப்போது வந்திருப்பதை அப்படி ஒன்றும் பெரிய ஆபத்தாக நான் கருதவில்லை.” சோழன் மன்ருடியாருடைய சொற்களில் இன்பம் கண்டான். எல்லாருமே அவர் முகத்தைப் பார்த் தார்கள்.

'சோழனுக்குப் பாண்டிய மன்னருடைய பெருமை தெரியாதா? கோபம் அறிவை மறைத்துவிட்டது. நான் சொல்லி அனுப்பிய விடையினுல் அவனுக்குச் சினம் மூண்டிருக்கவேண்டும். அதனுல்தான் இந்தப் பைத்தி யக்கார வேலையில் ஈடுபட்டிருக்கிருன். குறுமுளையைத் தறிக்கக் கோடரியா வேண்டும்? மன்னர் பிரான் அடியே னுக்கு உத்தரவு கொடுக்கட்டும்; ஒரு வேளையில் சோழனை விரட்டிவிட்டு வருகிறேன்' என்று மிடுக்கோடு சொன்னர் மன்ருடியார். х

“நானே நேரில் படையெடுத்துச் செல்லலாம் என்று அல்லவா யோசிக்கிறேன்?”

"மன்னர் பிரான் திருவுள்ளம் தெரிந்தும் அதை மறுக்கிறேன் என்று எண்ணக் கூடாது. சோழன் படை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/18&oldid=583981" இலிருந்து மீள்விக்கப்பட்டது