உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நல்ல சேனபதி

  • இரண்டு காரணம் என்ருயே; மற்ருென்று என்ன?” என்று கேட்டார் நவாப். . , . அது சாமானியமான காரணம். இந்தக் ć5ŁJ† ஊரில் உள்ளவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தது. இது வீதியில் வரும்போது பெண்கள் நடமாட முடிவதில்லை. இதன் மிடுக்கைக் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று நினைத்தேன்."

இது நம்முடைய கடா என்று தெரியாதா?”

" தெரியும். சமுகத்தில் மக்களுக்கு எது நன்மை என்று அறிந்து அதைச் செய்யும் பண்பு நிறைந் திருக்கிறதென்று அறிந்திருக்கிறேன். இந்தக் கடா வில்ை உண்டாகும் அபாயத்தை யாரும் இங்கே தெரி வித்திருக்க மாட்டார்கள். இதைக் கண்டு யாரும் பயப் படுவதோடு, இதல்ை விளையும் தீங்குகளினல் மக்கள் தங்களுக்குள் நவாபு அவர்களைப் பழி கூறி வருகிருர்கள். அறிவில்லாத ஓர் ஆட்டின் பொருட்டு, சமுகத்திற்குக் கெட்ட பெயர் வரக்கூடாதல்லவா? ஆகையால், அதை அடக்கி மக்களுடைய பயத்தைப் போக்கினல் சமுகத் துக்கு வந்த பழியைப் போக்கினவன் ஆவேன் என்று எண்ணினேன். -

இப்போது நவாப் தொண்டைமானுடைய பேச்சுச் சாதுரியத்தையும் வியந்தார்; இப்படி ஒரு வீரனை நம் கையில் வைத்திருந்தால் நமக்குச் சமயத்தில் பயன்படு வான் என்ற எண்ணம் அவருக்கு உண்டாகிவிட்டது. ஆட்டை நீ கொன்றிருக்கலாமே?' என்ற கேள்வி நவாபிடமிருந்து பிறந்தது.

என்னுடைய நோக்கம் என் வலிமையைச் சமுகத் துக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதுதான். அந்த வாயில்லாப் பிராணியைக் கொன்று என்ன பயன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/31&oldid=583994" இலிருந்து மீள்விக்கப்பட்டது