பக்கம்:நல்ல சேனாபதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நல்ல சேனபதி

'உங்களுக்குப் புலவர்களின் பெருமை நன்ருகத் தெரியாது என்று நினைக்கிறேன். இந்த வீட்டில் யாருக்கு நுழைய உரிமை இருந்தாலும் இல்லாவிட் டாலும் புலவர்களுக்கு முதல் உரிமை உண்டு. நீங்கள் கண்ட புலவர் எவ்வளவு பெரியவரோ அவர் உள்ளம் எப்படி வருந்தியதோ !”

வாணராயர் சற்றே பேசாமல் இருந்தார். அவர் தம் முடைய செயலால் மகிழ்ச்சி அடையவில்லை என்பதை உடன் இருந்தவர் உணர்ந்துகொண்டார். மெல்லப் பேச்சை முடித்துக்கொண்டு நழுவிவிட்டார்.

தம்மை நாடிவந்த புலவர்கள் தம்மைக் காண இய லாமல் போவதை வாணராயர் விரும்பவில்லை. முன்னலே சொன்ன இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் அவருக்கு மிக்க வருத்தத்தை உண்டாக்கின. இவ்வாறே வேறு சில சமயங்களில் வேறு காரணங்களால் புலவர் களைக் காண முடியாமல் போயிற்று. ஒரு முறை ஒரு புலவர் வந்திருந்தார். அவரைக் கண்டு வாணராயர் உபசரித்தார். ஒருநாள் புலவர் உடன் தங்கினர். விரை வில், ஊர் செல்லவேண்டும் என்ருர். அவருக்குச் செல்வர் பரிசளித்தார். புலவரோ தயங்கித் தயங்கி நின்ருர். தமக்கு இன்னது வேண்டுமென்று சொல்லு வதற்கு நாணினர். உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்?' என்ருர் உபகாரி. புலவர் ஒன்றும் சொல்லவில்லை. பின்னும் சிறிது பொருள் கொடுத்து அனுப்பினர். பிறரிடம் இன்னது வேண்டும் என்று. வெளிப்படையாகக் கேட்பதற்கு யாவருக்கும் துணிவு உண்டாகாது என்ற உண்மையை வாணராயர் உணர்ந் தார். புலவர்களுக்கு வேண்டியதை வேண்டுவதற்கு முன் குறிப்பறிந்து கொடுக்கவேண்டும் என்றும், தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/39&oldid=584002" இலிருந்து மீள்விக்கப்பட்டது