உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நல்ல சேனுபதி

கையரையும் அழைத்துக்கொண்டு, சோழ அரசனிடம் சென்ருன். அவனை எதிர்பார்த்திருந்த சோழன் அவ னைக் கண்டவுடன் பலபடியாகப் பாராட்டினன்.

அப்போது நரசிம்ம தேவன், "எல்லாப் பாராட்டும் இந்த மாவீரைச் சேரவேண்டும். இவரும் இவருடைய வீரர்களும் நம் படைக்குத் துணையாக வாராமல் இருந் தால் கோப்பெருஞ்சிங்கன் இந்தத் தலைநகருக்கே வந் திருப்பான். அவன் வர முடியாமல் தோற்று ஓடினன். கொங்கர் வீரம் சிங்கன் நெஞ்சில் பசுமையாக இருக்கும்" என்ருன். - -

சோழ அரசன் அது கேட்டு நன்றியறிவுடன் லிங்கையரைப் பார்த்தான். "இத்தகைய பெருவீரருக்கு நாம் என்ன கைம்மாறு செய்யவல்லோம்! நாடறிய இவரைக் கொண்டாடி ஏதேனும் சிறப்புப் பெயர் வழங் கலாம்” என்ருன்.

தன் விருப்பப்படியே வீரரும், குடிமக்களும், புல வரும் மல்கிய பேரவையிலே, அரசன் காங்கேயத் தலை வருக்கு மும்முடிப் பல்லவராயர்’ என்ற பட்டத்தை அளித்துப் பரிசுகள் பலவற்றையும் வழங்கின்ை. அது முதல் லிங்கையர் என்ற வழக்கு மாறி அவ் வீரரை யாவரும் மும்முடிப் பல்லவராயர் என்றே வழங்க லாயினர். - -.

சில நாட்கள் சோழர் தலைநகரில் மும்முடிப் பல்லவ ராயர் தங்கினர். ஒவ்வொரு நாளும் சோழ அரசளுேடு பேசி அளவளாவினர். அரசன், அவருடைய நலம் திங்குகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவருக்கு ஒரு புதல்வன் இருப்பதை அறிந்தபோது, 'அந்தப் பிள்ளையும் நம்முடைய படைக்கு ஒரு பெரிய துணையாக வரும் காலத்தை எதிர்பார்க்கிறேன்' என்று கூறின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/45&oldid=584008" இலிருந்து மீள்விக்கப்பட்டது