பக்கம்:நல்ல சேனாபதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - நல்ல சேனபதி

தால்செய்து, நடுநடுவே நவமணிகளைப் பதித்து அழகு படுத்தியிருந்த அது, தகதகவென்று மின்னியது. அதைக் கண்டபோது காங்கேய வள்ளலுக்குப் பெரு வியப்பு உண்டாயிற்று.

'இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்

தாம்அறிவர் தம்கொடையின் சீர்"

என்ற ஒளவையார் பாட்டு அவருடைய நினைவுக்கு வந்தது. சோழன், பல்லவராயருடைய குழந்தையின் நிலையை எண்ணி அதை அனுப்பவில்லை. தன் நிலையை எண்ணி, முடிமன்னனிடமிருந்து வரும் பரிசு என்று யாவரும் கண்டு போற்றும் வகையில், அதைச் செய்து அனுப்பி யிருந்தான். - -

மும்முடிப் பல்லவராயருடைய குழந்தை அந்தச் சிறு தேரை வைத்து விளையாடினன். அதைப் பார்ப் பதற்குப் பலர் கூடினர்கள். சோழனுடைய பெருந் தகைமையைப் பாராட்டினர்கள்.

2

ஒரு நாள் பல்லவராயருடைய குழந்தை வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான். வழக்கம்போல வேறு இளம் பிள்ளைகள் அந்தக் குழந்தையுடன் இருந்து, அவன் சிறு தேரை இழுக்கும்போது தாமும் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தார்கள். - -

அப்போது ஒரு புலவர் வந்தார். மும்முடிப் பல்லவ ராயருடைய வீரப்புகழையும், கொடைப்புகழையும் கேட் ட்வர் அவர். வறுமையால் வாடிய அவர், காங்கேயத் துக்குப் போய்ப் பரிசுபெற்று வரலாம் என்று வந்தார். அன்று பல்லவராயர் ஊரில் இல்லை. அவருடைய வீட்டுக்குச் சென்ற புலவர். அவர் இல்லாமையை உணர்ந்து வாட்டமுற்ருர் என்ன செய்வது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/47&oldid=584010" இலிருந்து மீள்விக்கப்பட்டது