உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நல்ல சேனுபதி

வில்லை" என்று ச்ொன்னன். புலவன் மறுநாள் வரு வான் என்று எதிர்பார்த்து ஆவலோடு காத்துக் கொண்டிருந்தான். அவன் முன்பு செய்த கற்பனை வேறு; அவன் வருவான்; தன் மறைவைக் கேட்டுத் துயருற்றுப் போவான் என்று நினைத்திருந்தான். இப் போது அந்தக் கற்பனை மாறியது.

புலவன் வந்தான். முக மலர்ச்சியுடன் அவனை வரவேற்று உபசரித்தான் செட்டி பிள்ளையப்பன். அவ னுக்குப் பொன்னும் பொருளும் வழங்கின்ை. அப்படி வழங்கியபோது, 'நீங்கள் புலமை உடையவர்கள் என்பது மாத்திரம் அன்று; நீங்கள் நல்ல தவமும் செய் திருக்கிறீர்கள். நீங்கள் போன இடம் எல்லாம் நன்மையே விளையும் ” என்று சொன்னன்.

புலவன், 'உங்களை எதிர்ப்பட்டது என் முன்னத் தவத்தின் பயன் என்பதை நான் நன்ருக உணர் கிறேன்” என்ருன். பாவம் செட்டி பிள்ளையப்பன் உள்ளத்துரடே என்ன கருத்து ஓடியது என்பதை அவன் எப்படி அறிவான்?

இந்த வள்ளலின் பெருமையைப் பாரியூரில் எழுந் தருளி யிருக்கும் அமர விடங்கர் என்ற திருநாமமுள்ள சிவபெருமானைப் பற்றி ஒரு புலவர் பாடிய குறவஞ்சியில், ஒரு பாட்டுச் சொல்கிறது. • . இட்டமான கவிசொலும் பாவலற் -

கில்லை என்று சொலற்கஞ்சிக் காட்டில்வாழ் துட்ட வன்புலித் துரில் புகுந்தநற்

நூய வன், கன வாள குலத்தினன், செட்டி பிள்ளையப் பன்தினம் தொண்டுசெய்

தேவி மாமலே மாதொரு பங்குள கட்டு செஞ்சடை அமர விடங்களுர்

கதித்து வாழ்பாரி யூர்எங்கள் ஊரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/59&oldid=584022" இலிருந்து மீள்விக்கப்பட்டது