உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண வரி இ

அவர்கள் உழைப்புப் பலித்தது. இறைவன் அருள் செய்தான். நான் மனம் உருகி வேண்டிக் கொண்டது. உண்மைதான். ஆயினும் மக்களுடைய உழைப்பும் இறைவன் திருவருளும் இணைந்து நன்மையை உண் டாக்கின. நான் என்ன செய்தேன்! ஒரு கை மண்ணைக் கூட அள்ளிப் போடவில்லை. எல்லோரும் மனமுருகி வேண்டிக்கொள்வதையே நான் கவியாகச் சொன் னேன். இறைவன் திருவருள் தக்க சமயத்தில் என்னைப் பாடச் செய்து எனக்கும் ஒரு பெருமதிப்பை உண் டாக்கி வைத்தது.”

கம்பருடைய பணிவைக் கண்டு வியந்தனர் கொங்கு நாட்டுத் தலைவர்கள். அரசன் அப்புலவர் பிரானை மிக வும் பாராட்டிப் பலவகைப் பரிசில்களை வழங்கின்ை. அப்போது கொங்கு நாட்டுத் தலைவர்கள், மன்னர் பெருமானுக்கு ஒரு விண்ணப்பம்” என்ருர்கள்.

"என்ன?”

'இந்தக் கவிஞர் பெருமான் செய்த காரியம் நாட்டு மக்கள் எப்போதும் நன்றியறிவோடு நினைப்பதற். குரியது. இப்போது சில பரிசுகளைக் கொடுத்ததல்ை இவர் செய்த உதவிக்குக் கைம்மாறு செய்துவிட்ட தாகாது. எப்போதுமே இந்த அருட் செயலை நினைத்து வாழ ஒரு வகை செய்யவேண்டும்” என்ருர், அவர்களுள் பெரிய தலைவர்.

"என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள்?" என்று மன்னன் கேட்டான். -

சோழ நாட்டைப்பற்றிச் சொல்ல எனக்கு உரிமை இல்லை. எங்கள் கொங்கு மண்டலத்து மக்கள் இப் பெருமானை எப்போதும் மறவாமல் நினைந்து பாராட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/68&oldid=584031" இலிருந்து மீள்விக்கப்பட்டது