பக்கம்:நல்ல சேனாபதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண வரி 61

பிறப்பிக்க இருப்பதை அடியேன் நன்றியறிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனல் கொங்கு நாட்டில் புல வர்கள் பலர் வறுமையிஞல் வாடுகிருர்கள். நான் புல வன் என்ற சிறப்பினுல் இந்த வரிப் பணத்தைப் பெற இருக்கிறேன். நான் பெறுவதை அந்த நாட்டுப் புலவர் கள் பெறும்படி ஆணை பிறப்பிக்க வேண்டும். இதல்ை அவர்களுடைய வறுமையும் தீரும் , என்னையும் மக்கள் நினைக்க வழி ஏற்படும்” என்ருர்.

கம்பருடைய பெருந்தன்மை யாவரையும் வியப் புக்கு ஆளாக்கியது. மன்னன் கம்பர் விருப்பப்படியே செய்தான். அதுமுதல் கொங்கு நாட்டு வேளாளர் வீட்டுக் கல்யாணங்களில் அந்த நாட்டுப் புலவர்கள் மரியாதை பெறலாஞர்கள். அவர்கள் கல்யாணத்துக் குச் சென்று வாழி பாடுவார்கள். பின்பு மணமனையினர் அளிக்கும் பாலை உண்டு கல்யாண வரியைப் பெறு வார்கள். புலவர் வாழி பாடாவிட்டால் திருமணம் நடந்த தாகவே மக்கள் கருதுவதில்லை. நாட்டுக்குத் தீங்கு புரி பவர்கள் வீட்டுக்குப் புலவர்கள் போவதில்லை. அவர்கள் வாழி பாடாவிட்டால் அந்த வீட்டினரை மக்கள் புறக் கணித்து இழிவு செய்வார்கள்.

இன்றும் கொங்குநாட்டில் வாழும் புலவர் என்னும் மரபினர் கம்பரால் கிடைத்த இந்தக் கல்யாண வரியைப் பெற்று வாழி பாடி வாழ்ந்து வருகிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/70&oldid=584033" இலிருந்து மீள்விக்கப்பட்டது