பக்கம்:நல்ல சேனாபதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நல்ல சேனபதி

"யார் அப்பா அவர்கள்?’ என்று சிவிகை தாங்கு

பவரைக் கேட்டான் வாணன். -

'எங்களைச் சேர்ந்தவர்கள்" என்ருர்கள்.

"ஏன் இந்த வழியாகச் சிவிகையைக் கொண்டு போகிறீர்கள்?" -

“இதுவரையில் உங்கள் விருப்பப்படி நாங்கள் போளுேம். இப்போது நீங்கள் எங்கள் விருப்பப்படி வரவேண்டும்.”

"எங்கே போகிறீர்கள்?

'பாண்டிய மன்னரிடத்தில். அவர் உங்களை வர வேற்கக் காத்துக் கொண்டிருக்கிருர்” என்று ஒரு வீரன் சொன்னபோது யாவரும் நகைத்தர்ர்கள். -:

வாணன் கூண்டில் அடைபட்ட புலி போலானுன். பெருந்திரளாகப் படை வீரர்கள் கூட்டம் அருகில் காவலாக வரும்போது அவல்ை என்ன செய்யமுடியும்? தன் தலைவிதியை நொந்துகொண்டிருந்தான். х சிவிகை இடையே சில இடங்களில் தங்கி இறுதி யில் சங்ககிரியை அடைந்தது. யாரும் ஒரு துணை யின்றி ஆறகளூர் வாணன் தன்னந் தனியணுகப் பாண்டியன் முன் நின்ருன், -

"இப்படி, வஞ்சகமாகப் பிடித்து வருவதுதான் பாண்டிய மன்னருக்கு அழகோ?” என்று அவன் கேட்டான். . - -

"பல காலமாக எங்கள் குடிக்கு நேர்ந்த பழியை மாற்றிக்கொள்ளவே இதைச் செய்தேன். இனி உம் முடைய ஆட்சி நமக்கு அடங்கி நடக்கவேண்டும். இல்லையெனில் உம்முடைய உயிர் இந்த உடலில் நில்லாது” என்ருன் பாண்டியன். . . . . . . r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/77&oldid=584040" இலிருந்து மீள்விக்கப்பட்டது