பக்கம்:நல்ல சேனாபதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*4 நல்ல சேகுபதி

சரி என்று அந்தக் கருஞ்சோற்றை அவன் உண்டான். தன் குருவின் கண்ணில் சிறிதுகூடப் படவேண்டாம் என்பது அவன் கருத்து.

சோற்றை உண்ட பிறகு, வழக்கமாகக் களைப்பு உண்டாகும். ஆல்ை, இப்போது அவனுக்கு உடம் பிலே ஒரு கிளர்ச்சி தோன்றியது. பத்து ஆள் பாரத்தைச் சுமக்கலாம் என்பது போன்ற மிடுக்கு உண்டாயிற்று. t

அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை தான் தின்ற சோற்றில் ஏதோ சிறப்பு இருக்கவேண்டும் என்று உணர்ந்து கொண்டான். தன் குருவுக்கு இது தெரிந்தால் வருந்துவாரே என்று அஞ்சின்ை. சாதத்தை நன்ருக மூடி வைத்துவிட்டு, அருகிலே ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து மூலன் உண்ணும் பொருட்டு வந்தான். அங்கே பானையில் சோறு இருந்தது. அருகில் மற்ற உண்டிகள் இருந்தன. ஆனல், மாளுக் கனைக் காணவில்லை. பானையைப் பார்த்தபோது வழக்க மாக இருக்கும் அளவுக்குச் சோறு இல்லை.

தன் மாளுக்கன் முன்னே உண்டிருக்க வேண்டும் என்று ஊகித்தான் மூலன். அதனுல்தான் சோறு குறைந்திருக்கிறது என்பது அவன் எண்ணம். ஏன் அவன் முத்லில் உண்ண வேண்டும்? அவ்வாறு செய் கிறவன் அல்லவே இப்போது எங்கே போய் விட்டான்? இந்த யோசனைகளிலே ஆழ்ந்துவிட்டான் குரு. பின், மாளுக்கனைப் பெயர் சொல்லிக் கூவின்ை. நாலு திசையும் பார்த்தான். அவன் உரக்கக் கூவுவதைக் கேட்டும். இன்னும் உண்ணுமல் இருப்பதை அறிந்தும் அந்த மாளுக்கனுக்கு ஒளிந்துகொண்டிருக்க மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/83&oldid=584046" இலிருந்து மீள்விக்கப்பட்டது