உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நல்ல சேனபதி

துழாவிய கொம்பெங் கென்ருன்;

சுள்ளியிற் போட்டேன் என்ன,

வழாது உண்ட சோற்றை

வாயினிற் கக்கென் ருேத

விழாதசோ றதனேக் கக்க,

மிச்சிலேக் குருவும் உண்டான்;

தொழார்எவர் இவர்கள் தம்மைச்

சுந்தரப் பால ரானர்.

(சுள்ளி - சிறு கோல்கள்; மிச்சிக்ல - எச்சிலை.)

இந்த வரலாற்றை வேறு ஊர்களிலும் சொல்வ துண்டு. கருநெல்லி மரத்துக்கு இளமையை உண்டாக் கும் இயல்பு உண்டென்று மேலே சொன்ன பாடல் களால் தெரியவருகிறது. அதிகமான் ஒளவையாருக்கு இளமை மாருமல் இருக்கும் தன்மையுள்ள நெல்லிக் கனியை அளித்தான் என்ற வரலாறு சங்க நூல்களில் வருகிறது. அந்த நெல்லிக் கனி கரு நெல்லிக் கனியே என்பர். அந்தக் கனியை அமிழ்து விளை தீங்கனி' என்று ஒளவையார் பாராட்டுகிருர். அமிழ்து இறப்பை நீக்குவது. - - - -

மேலே சொன்ன கதையைக் கொங்கு மண்டல சதகமும் கூறுகிறது. -

உலேயில் அமுது படைத்துண்ட சீடன் ஒளித்திருப்பத் தலையில் மயிரும் கறுக்கக்கண்

டேஅவன் சற்குருவும் கிலேயுடன் கக்குவித் துண்டடைக்

தான்நன் னெறியிற்கஞ்ச மலேயில் அதிசயம் கண்டது

வும்கொங்கு மண்டலமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/87&oldid=584050" இலிருந்து மீள்விக்கப்பட்டது