பக்கம்:நல்ல சேனாபதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணல் பரப்பின வள்ளல் 83 "அவர் உங்களிடம் ஏதாவது கேட்டாரா? நீங்கள் அவருக்கு என்ன கொடுத்தீர்கள்?' என்று கேட்டார் புலவர். -

"அவர் தமக்கு ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆளுல், அவர் முகம் மிகவும் வாட்ட முற்றிருந்தது.” -

"அவர் ஒன்றும் கேட்கவில்லையா ? வியப்பாக இருக்கிறதே! நான் படித்துப் படித்துச் சொன்னேனே! வாயைத் திறந்து கேட்டால் இங்கே எல்லாம் கிடைக்கும் என்றேனே; அதை அவர் நம்பவில்லையா?”

'உங்களுக்கு அவரைத் தெரியுமா? அவர் யார்? அவர் ஏன் அப்படி வாட்டத்தோடு இருக்கவேண்டும்?” "அவரைப்பற்றி நான் சொன்னல் நீங்கள் ஆச்சரி யப்படுவீர்கள். அவரும் உங்களைப்போலச் செல்வராக இருந்தவர். ஊழ்வினையினல் அவர் நிலை மாறியது. இப்போது தம்மிடம் இருந்த பொருள் முழுவதும் போய், வறிய நிலையில் இருக்கிருர். கொடுத்துக் கொடுத்துச் சளைத்த கை; உயிர் போனுலும் பிறரிடம் நீளாத கை.” . . ..

"அப்படியா? அவர் தம்மைப்பற்றி ஒன்றும் சொல் லிக் கொள்ளவில்லை. மற்றவர்களைப்போல வந்தார். உணவு கொண்டார். புறப்பட்டு விட்டார்!’

'அடடா! நான் எவ்வளவு வற்புறுத்திச் சொன் னேன்! நீங்கள் அங்கே போனல் தாராளமாக உங்க ளுக்கு வேண்டியதைச் சொல்லலாம் என்று ஊக்க மூட்டினேன்.”

'அப்படியெல்லாம் செய்ய என்ன அவசியம் நேர்ந்தது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/92&oldid=584055" இலிருந்து மீள்விக்கப்பட்டது