பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசன்

27

கிள்ளை : அவை அனைத்தும் மெய்

அரசர் : முல்லையே இவை மெய்யா?

முல்லை : ஆம் மெய்.

அரசர் : நீ என்ன கூறுவாய் கிள்ளையே!

கிள்ளை : என்னிடம் எப்போது பார்த்தாள் சாலி?

சாலி : நேற்றுக் கையில் வைத்திருந்த போது தான் சாலி பார்த்தாள்.

கிள்ளை : எந்த இடத்தில்

சாலி : இளவரசியை விட்டு வெளிவருகையில்

கிள்ளை : எப்படி வைத்திருந்தேன்?

சாலி : கையில்

கிள்ளை : எந்தக் கையில் ?

சாலி : உம்--வலக்கையில்!

கிள்ளை : என் வலக்கையில் அச் சிறிய பொருளை வைத்திருந்தால் அது எப்படித் தெரிந்தது சாலிக்கு?

சாலி : நான் தான் என்ன அது என்று கேட்டேன் கிள்ளைதான் இது மாணிக்கக் கணையாழி என்று கூறினாள்.

கிள்ளை : அது பற்றிச் சாலி கிள்ளையை ஒன்றும் கேட்கவில்லையா?

சாலி : இல்லை

முல்லை : பேரரசே நான் ஒன்று கூற முன்வருகிறேன். சாலி முதலில் என்னிடமும் தங்களிடமும், கூறியது வேறு அவள் கூறினாள்: கிள்ளையிடமிருந்து ஏதோ ஒன்று கீழ் விழுந்தது. அது சிவப்பொளியுடையதாய் இருந்தது. அதை அவள் இடையில் செருகினாள், அது தங்கக் காசைத்துணியில் அழுத்திய அளவில் தோன்றிற்று என்றாள்.