பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நாச்சியப்பன் தாலிகட்டி விட்டானெம் தங்கமகன் ஒப்பிவிட்டோம். போலித் தனமாகப் போயினவே அத்தனையும்! பம்பாய்க்குச் சென்றமகன் பார்த்துவந்த சோதிடனும் உம்பா லிருக்கும் ஒருபீடை பெண்ணுருவில் அந்தத் தொடர்பிருக்கும் அத்தனைநாள் அத்தனையும் சொந்தமாம் வாழ்வெல்லாம் துன்பமே சூழ்ந்திருக்கும் கட்டிவைத்த பெண்னவளின் கண்ணில் விழிக்காமல் எட்டி யிருந்தால்தான் ஏற்றம் பிறக்குமெனச் சொல்லி விழிக்கவைத்தான் தூது நீ போய்விடெனக் கொல்லும் மொழியாலே கூறுகின்ற மாமியினைக் கிள்ளேயெனும் பூவடிவாள் கீழ்மேலும் பார்த்துநின்ருள் உள்ளபடி மாமிக் கொருகிறுக்கும் இல்லையே ஏனே உளறுகின்ருள் என்று நினைத்திருந்தாள் வானே தலைமீது வந்திடித்தாற் போலுணர்ந்தாள் புத்துணர்வும் வாழ்விற் புதுநோக்கும் பாரெங்கும் சித்திக்கும் நேரத்தே தீய மடமையினைப் பேசுகின் முரே பெரிதும் வியப்பெனவே ஏசுவதற் காற்ருமல் ஏழை திரும்பிவந்தாள். கோதைக்குச் செய்தியினைக் கூறியபோ தன்னவளும் பேதைப் பெண் ணே நீ பெருந்தவறு செய்கின்ருய் உன்னை ஒதுக்கி உறவில்ஒரு பெண்தேடிச் சின்ன மகனின் திருமணத்தைச் செய்வதற்குத் திட்டமிடு கின்ருர் தெரிந்துகொள் என்றுரைத்தாள். குட்டை மனத்தார் கொடிய நினைப்பகற்ற நெஞ்சுறுதி வேண்டுமடி நெஞ்சுறுதி வேண்டுமென்ருள் அஞ்சாதே மீண்டும்நீ அங்கேசெல் என்றுரைத்தாள்