பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நாச்சியப்பன். புக்கசிறு பூச்சியெனப் பொன்னின் எழில்மிக்காள் மிக்க மனங்கலங்கி மேற்கொண்டு தன்னிலைமை என்னென் றறியாமல் ஏக்கப் பெருமூச்சால் சின்னமுறு நெஞ்சம் சிதறிக் கலங்கிநின்ருள் பூத்தமலர் பேய்க்காற்றில் பொன்னிதழைப் போக்கடித்து மீத்துநிற்கும் காம்பேபோல் மெய்குலைந்த தோற்றமுடன் மெல்ல நடைபிணமாய் மேற்பரப்பில் ஆடிநிற்கும் புல்லிதழைப் போலே பொருமி நிலைகுல்ைந்தாள். வங்கங் கடந்தாள் மங்கை என்றும் துணையின்றி ஏங்கித் தவித்திருக்க ஒன்றுமிவ் வாழ்க்கை உதவாத வாழ்க்கையென நெஞ்சு நடுங்குகின்ற நேரிழையாள் கொண்டிருந்த பிஞ்சு மனமதுதான் பேதைமையால் தற்கொலையை நாடும் ஒருபோது நன்றல்ல என்ருெதுக்கித் தேடும் ஒருவழியைத் தீராத துன்பத்தைப் போக்கும் முயற்சி புதுவழியை ஆய்ந்தாய்ந்து பார்த்திடும்போ தங்கே பளிச்சிட்ட தோரெண்ணம். ஆளன் பிரிந்திருக்க யானிங் கிருப்பேனேல் மீளும் வழியில்லை மேதினியில் நான்வாழ வேண்டுமென்ருல் சீதையவள் வில்லழகன் பின்தொடர்ந்த நீண்ட பயணம் நிகழ்த்தாது விட்டதென்றன் - குற்றம் எனநினைத்தாள் கூடிக் களித்திருக்க இன்றைக்கே கப்பலிலே ஏறி யவன்பதியைப் போயடைய வேண்டுமென்று பொங்கும் உளத்தோடு தூயாள் உணர்ந்தாள்; தொடங்கிவிட்டாள் தன்பயணம்: