பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T30 நாச்சியப்பன் 'அடி உன்றன் நன்றிக் கேட்டை அகற்றினேன் நரகஞ் சென்று வடியேடி கண்ணிர்' என்ருள் வானிடி எனச் சிரித்தாள்! "தீர்ந்தது பகைஒன் றின்று தீராத பகைஇரண்டும் மீந்தன ஒன்ற ழித்தால் மேதினி மீது மற்று மீந்துள ஒன்றும் சாகும் வெறியெலாம் தீரும்” என்றே ஏந்திய வாளி ைேடும் ஏறினுள் குதிரை ஒன்றில்! நண்பகல் நேர மாதல், நகருள மக்க ளெல்லாம் கண்களை மூடிச் சற்றுக் களைப்பினை நீக்க லாமென் றெண்ணியே துரங்கி னரால் ஏந்திய வாளி ைேடு கண்கனல் சிந்தச் செல்லும் கன்னிக்குத் தடைகள் இல்லை. அங்கையின் வாளை ஏந்தி அம்புபோல் குதிரை செல்ல வெங்கனல் விழிகள் கக்க விரைவுபோ தாதென் றுன்னி அங்கத்தில் வாளி ளுலே அடித்துக்கு திரைசெ லுத்தும் மங்கையின் வெறிக்கு நல்ல மதுவெறி தோற்றுப் போகும்!