உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நாச்சியப்பன் இந்தமொழி கேட்டுசெவி குளிர் அடைய இன்பத்தால் உதடுகுவித் தொருதல் முத்தம் தந்தவனின் உளங்குளிரச் செய்யும் நோக்கால் தாவப்போம் நிலையினிலே அடிநில் லென்று வந்தமொழி கேட்டந்தப் பக்கந் தன்னில் வனிதையுடன் காதலனும் திரும்பிப் பார்க்க வந்தாள்.அச் சுந்தரியாள் வாள்பி டித்து வந்தவள் கீழ் இறங்கித்தன் குதிரைமேலே, சாய்ந்தபடி நின்ருளை வஞ்சி கேட்டாள்: 'சாகும்வகை குதிரையினை அடித்த டித்துத் தோய்குருதி வாள்பிடித்துச் சோலைவந்த தோகாய்நீ யாரிங்கு வந்த தேனே? வாய் திறவாய்!” “வாய்மட்டும் அல்ல, ஏடி வானகத்தை நீயடையும் வழியும் நானே பாய்வாளால் திறப்பே' னென் றுரைத்துப் பின்னும் பகர்கின்ருள், வஞ்சகனைப் புத்தன் தன்னை மயக்கியதும் நீயன்ருே? மடிவாய்!” என்று மனவலியை ஒன்ருக்கி, வாளை ஒங்கி உயர்த்தடித்த வீச்சிலந்த வஞ்சி வீழ, ஓடிவந்த களைப்பாலும், குருதி வெள்ளம் பயந்தமயக் கத்தாலும் பாய்மா சாய்ந்து பாதகி அச் சுந்தரியின் மேலே வீழக் கயமைமகள் கீழ்வீழ்ந்தாள்; கையிற் கத்தி கடிந்தேகி அவள் மார்பைத் துளைத்த தன்றே! பாய்வாளைப் பார்த்தான்பின் பாவை வீழப் பார்த்தான்பின் பாய்மாமேல் வந்து ரத்தம் தோய்வாளைப் பிடித்தகந் தரியாள் வீழ்ந்து துடித்திறந்த நிலையினையும் பார்த்தான் ரத்தம்