உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இன்பமுற வாழ்கவெனக் குருசொன் ஞரே! என் தந்தை மகிழ்வுடனே அனுப்பி னரே! மன்பதையில் துறவுகளைந் தேவந் தேனே! வஞ்சியுங்கா தவித்தாளென் றின்புற் றேனே! அன்புடைய புத்தர்களே ஆலின் நீழல் அமர்ந்திருக்க விட்டுவிட்டு யான்வந் தேனே! என்பயன் இங் குற்றுவிட்டேன்? இங்கு வந்தேன் எதற்குவந்தேன்? ஏன்வந்தேன்? ஏன்வந் தேனே! இனிநான்போய்க் குருமுகத்தை எவ்வா றென்றன் இருவிழியாற் காண்பேன்? ஒ! மணந்த பின்னர் தனியிருப்போர் துறவடைதல் புத்தந் தன்னில் தகாதடா என்ருரே மான மற்றேன் இனித்தந்தை முகங்காணல் பாவம். அந்த ஏந்திழைக்கு நாைெருநாள் இசைத்தே னன்ருே? தனியடிநான் என்றென்றும் தனிதான் என்று தனிமையினைத் தரத்தானே குதிரைமீது, தாவிவந்தாள்? ஒருயிராய்க் கலக்க நிற்கும் தண்மதியின் முகமுடையாள் வஞ்சி யாளின் ஆவிதனை வாளாலே அகற்றி விட்டாள்! அன்புடனே முத்தமிட வந்த காதல் தேவிதனை நில்லென்ருள்! தீண்டா வண்ணம் செய்தெனையே மலைக்கவைத்துக் குத்திச்செத்துப் போய்விழுந்தாள் தனிமைதனக் காத்துத் தந்தாள்? போகின்றேன் தனியேநான்” என்ருன். போனன்!