பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 167 முத்தப்பன் மீதுண்மைக் காதல் கொண்ட முல்லைக்காய் அவளுள்ளம் இரங்கிற் ருகச் சித்தத்தில் பொன்னப்பன் வெறுப்புத் தோன்றச். சேயிழையாள் ஒருமுடிவு செய்து கொண்டாள். எத்தனிவன் திட்டங்கள் பொடியாய்ப் போக இப்போதே முல்லைக்குத் துணையாய் நின்று சத்தான வாழ்வளிக்க வேண்டும்; வாழ்வுச் - சாதனையாய் இதைக்கொள்ள வேண்டும் என்றே! பின்தொடர்ந்து வந்தவளை மறந்தா கிைப் பித்தன்போல் பொன்னப்பன் அகன்ற பின்பு தன்னிலையை எண்ணியங்கு மலைத்த வாறு தனியாகத் தாமரையாள் நின்றி ருக்கப் பொன்னிலங்கு பூங்கொடியாம் முல்லைப் பெண்ணுள் புறம்வந்த போதங்கே கண்டு விட்டாள். என்னடியில் வரண்மனையில் மகளிர் பக்கம் இருந்தகட்டுக் குறைந்ததுவோ என்ற திர்ந்தாள்! புன்மைமிகு பொன்னப்பன் மகளிர் பக்கம் புகுந்துவரல் தடுக்காமை யாலே யன்ருே தன்மையிழந் தாடவர்கள் பிறரும் இங்கே தலைநீட்டத் தொடங்கிவிட்டார் காவ லின்றி என்னடிநீர் செய்கின்றீர் தோழி மாரே இங்கோடி வாருங்கள்! கட்டு மீறிச் சின்னமுற வந்தவனைப் பிடிப்பீர்! என்ருள் சேடியர்கள் தாமரையை வளைத்துக் கொண்டார்! கத்துாரி சவ்வாது புனுகு கொண்ட கைப்பெட்டி யோடவளைப் பிடித்து வந்து முத்துப்பல் முல்லைஎதிர் நிறுத்தி ஞர்கள் முகங்கடுக்கச் சினக்குரலில் அதட்ட லோடே