பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 20ჩ உவமைகளோ குவிந்திருக்கும்! சுவைப்பேச்சுப் பேசுங்கால் ஒன்ருே டொன்ருய்த் தவழ்ந்துவரும் கேள்விகட்குப் பதில்சொல்லத் தெரியாமல் தவித்த பேர்கள் இவர்கட்சித் தொண்டர்களாய் இன்றிருக்கும் நிலையொன்றே ஈரோட் டண்ணல்இவர்பேச்சின் திறம்விளக்கப் போதுமெனக் கூறிடுவேன்! எழுச்சி கொள்வேன்! சொற்பொழிவு மேடையிலே ஏறியதும் நான்சொல்லும் சொற்கள் தம்மில் நெற்பயிரை அறுத்துவந்தே உமியரிசி தவிடிதென நிலைபி ரித்து வைப்பதுபோல் தனித்தனியே ஆராய்ந்து பார்த்ததன்பின் வளர்க ருத்திற் கொப்புவன ஏற்றிடுக ஒவ்வாதேல் தள்ளுகென உரைப்பார் தாத்தா! கருத்துக்குத் தடையிட்டு வைத்திருந்த மதத்தலைவர் கயமை மாற்றிக் கருத்துவெளிப் பட்டால்தான் மற்றவரும் சிந்தித்துக் காரி யத்தில் கருத்துடனே உழைத்திடலாம்! இல்லை.எனில் முன்னேறக் கருதிச் செல்லும் கருத்துடையார் தடைப்படுவர் எனப்பேசிப் புதுமைமிக்க கருத்து ரைப்பார்! அவர்தம் ஆற்றல் தவறுமிகச் செய்துவிட்டார் அந்நாளில் தமிழரெலாம்! தமிழர் நாட்டில் சுவரிருந்தும் கூரையில்லே! வளமிகுந்தும் வாழ்வில்லை! சொன்னல் வெட்கம்!