உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 39 நெறியைக் கூருமல் கூறிக் காவலர் இல்ல'த்தில் காதல் பயிர் வளர்க்கக் கவிதை நீர் வார்க்கின்ருர் கவிஞர். காதல் என்பது தங்கு தடையின்றிப் பொங்கிப் பரவி வரும் வெள்ளம் அன்று. அன்றைய தினப்புனமும், அருவியும், நீர்வரவும் காதல் களங்களாக இன்றைய சூழலில் அமைதற்கு இயலாதவை. இதனை உணர்ந்த கவிஞர் தட்டெழுத்துப் பயிலும் கல்வி அகத்தில் காதல் என்ற பெயரில் வெறிநாய்கள் மேய்வதையும், பெண்ணை மணப் பதுடன் அவள் சொத்தைக் களவாடும் வாய்ப்பாகச் சூழ்ச்சித் திட்டம் தீட்டுவதையும் கண்டு மனம் துடிக்கிரு.ர். பொய்ப்பழி துரவத் தயங்காத புல்லர் கூட்டத்திடையே தெய்வமகனக ஆணழகன் ஒருவன் உருவாவதையும் அவன் "பைங்கிளிகளைக் கொத்தப் பறக்கும் கொடும் பருந்து’களை விரட்டுவதையும் நல்லுணர்வு பரப்பு நாட்டில் நல்லறிவுக் கருத்தைப் பரப்புவதையும் வாழவைத்தான் வாயிலாக எடுத்துரைக்கிருர் கவிஞர். திருமணத்தின் பின் திருமணம் என்பது மனநிறை வாழ்வில் அல்லாமல் மூட நம்பிக்கைப் பஞ்சாங்க மூட்டையில் இல்லை என்பதைப் பம்பாய்ப் பஞ்சாங்கம் கிழிபடக் காட்டுவதுடன் ஒருவன் ஒருத்தி என்ற மண ஒப்பந்த வலிமையை வங்கங் கடந்த மங்கை வாழ்வில் புலப்படக் கவிதைச் சிறகடிக்கிருர் நாச்சியப்பன். பாதி வழி கைலைபாதி காளத்தி பாதி' பாடிய சமய நெறியைத் தமிழ்ப்பாவுலகம் நன்கறியும். அந்நெறியின் வடிவை மட்டும் தாங்கிப் பிடிப்பது போல் காட்டி இனிய பாதி’ என்ற தலைப்பை ஈந்துள்ளார் கவிஞர். புதிய வரவுக்கேற்பப்