பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

55


தரித்ததனால், எனது நண்பர்கள் இவரை எனது மனைவி என்று ஏளனம் செய்வார்கள். இவர் கடைசியாக ஸ்திரீவேடம் தரித்தது சுகுண விலாச சபை பெங்களூருக்குப் போயிருந்த சமயத்தில் மனோஹரன் என்னும் நாடகத்தில் விஜயாளாக. அதன் பிறகு இவர் உத்யோக விஷயமாக வெளியூருக்கு மாற்றப்பட்டபடியால் சபையில் வேடம் தரிப்பதற்கு அனுகூலப்படாமற்போயிற்று. இவர் அக்காலம் மந்திரி குமாரன் மனைவியாகிய பானுமதியின் வேடத்தில் ஆகிரி ராகத்தில் பாடிய ஒரு பாட்டு இன்னும் எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. கேட்பவர் உள்ளம் உருகும்படியாக அப்பாட்டைப் பாடுவார். அதைக் கேட்பவர்கள் ஏதாவது கூட்டங்களில் சங்கீதம் கேட்க வேண்டுமென்றால் இவரை அப்பாட்டைத்தான் பாடச் சொல்வார்கள். ஆகிரி ராகமானது நடு நிசியல் பாட வேண்டிய ராகம். நாடகம் ஆடும் பொழுது இவர் அப்பாட்டைப் பாடவேண்டிய காலமும் சுமார் பனிரெண்டு மணியாகும். நடு நிசியில் இவர் அப்பாட்டை நிசப்தமாயிருக்கும்பொழுது பாடுவது மிகவும் மன உருக்கமாயிருக்கும்.

இவர் இப்பொழுது வயோதிகராய் கவர்வுன்மென்ட் உத்தியோகத்திலிருந்து பென்ஷன் வாங்கிக் கொண்டு பட்டணம் வந்து சேர்ந்து, தம்புச்செட்டி வீதியில் வசித்துக் கொண்டிருக்கிறார். ஏதோ கிரஹசாரத்தினால் பாரிச வாய்வினால் பீடிக்கப்பட்டு சில வருஷங்களாகப் படுத்த படுக்கையாய் இருக்கிறார். இளமையும் யௌவனமும் நிலையாமைக்கு இவரே எனக்குப் பிரத்தியட்சப் பிரமாணமாயிருக்கிறார். இவரது தேக சௌக்கிய விசாரணை செய்வதற்காக எப்பொழுதாவது நான் போகும் போதெல்லாம், இவர் என்னுடன் நாடகமேடையில் நடித்ததெல்லாம் எனக்கு நினைவு வந்து மிக்க துக்கம் விளைக்கும். இது காரணம் பற்றியே நான் இவரை அடிக்கடி பார்ப்பதற்கில்லாமற் போகிறது. இவர் தற்காலம் பேரன் பேத்தியை எடுத்த “தாத்தா"வாகி விட்டார். இவருடைய குமாரனாகிய துரைசாமி ஐயர், ‘இரண்டு நண்பர்கள்’ என்னும் எனது நாடகமொன்றில், என் காதலியாகிய சத்யவதியாக என்னுடன் சில வருடங்களுக்கு முன் நடித்தார்: அச்சிறுவன் முக ஜாடையும் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன் சாகரிகையாக என்னுடன்