பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

இவ்வரலாற்று வளர்ச்சியைக் கேட்டுக் கொண்டே போனுேம். முப்பத்திரண்டு கிலோ. மீட்டர்கள் சென்றதும் மாஸ்கோ நகரை நெருங்கினோம். நகர் எல்லையில் சில செங்கொடிகள் பறந்தன.
"இதோ இரு பக்கங்களிலும் பாருங்கள். மாடி வீடுகளெல்லாம் புதிதாகக் கட்டப்பட்டவை. எல்லா வசதிகளும் பொருந்திய தனித்தனி அறைக்கட்டுகள்(Flats) கொண்டவை” என்று சுட்டிக் காட்டினர் உடன் வந்த அதிகாரி.
வினு கோவா விமான நிலையத்திலிருந்து மாஸ்கோ செல்லும் வரை சும்மா இருக்க முடி யுமா? சோவியத் ஒன்றியத்தைப்பற்றி விசாரித்தோம் எங்களுக்குப் பல தகவல்களைத் தந்தனர்.அதன் சுருக்கம் இதோ :
'சோவியத் ஒன்றியம்' என்பது பதினேந்து குடியரசுகளின் இணைப்பு. அவை இரசியா, உக்ரெயின், பைலோ ரஷியா, மால்டேவியா, லாட்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா, அர்மீனியா, ஜியார்ஜியா, ஆஜர்பெய்ஜான், உஸ்பெக்கிஸ்தான், துருக்மெனிஸ்தான், தாஜிகிஸ்தான், கலாக்ஸ்தான், கிர்கிளலியா ஆகும்.
ஒவ்வொரு குடியரசிற்கும் தனித்தனி ஆட்சியும் தலைநகரமும் உண்டு. இத்தனையும் ஒன்றால் இணைந்தது சோவியத் ஒன்றியம். இதன் முழுப் பெயர் சோவியத் சமதர்மக் குடியரசுகளின் ஒன்றியம்' என்பதாகும். ஒன்றியத்தின் தலைநகரம் மாஸ்கோ.