பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

டைய ஆலோசனையைக் கேட்டுச் சிரித்தேன். அது முழுவதும் ஹம்பக் ஏனெனில் எங்களையொத்த மனோபாவமுடையவர்கள் நிரபராதிகளான தங்களுடையசொந்த ஜனங்களின்மீது வெடிகுண்டுகளை வீசமாட்டார்கள்.

சில நிபந்தனைகள்

மனோகரமான ஒருநாள் காலையில் சி.அய்.டி. இலாக்காவின் பிரதம சூப்பிரன்டெண்டான மிஸ்டர் நியூமென் (New Man) என்னிடம்வந்தார். அவர் மிகுந்த அனுதாபத்தோடு நீண்ட நேரம் என்னோடு பேசிக்கொண்டிருந்தார். பின் முடிவாக, அவர்களால் கோரப்படுகிறபடி நான் எவ்விதமான அறிக்கையும் கொடுக்காவிட்டால், காக்கோரி வழக்கு சம்பந்தமாய், யுத்தம் தொடங்கச் சதியாலோசனை செய்ததாகவும், தசரா வெடிகுண்டுவிபத்து சம்பந்தமாய் கொடிய கொலைகள் செய்ததாகவும், என்னை விசாரணைக்கு அனுப்புமாறு தாங்கள் நிர்ப்பந்திக்கப்படுவோமென்று கூறினார். மேலும் அவர் என்னைக் குற்றவாளியாக்கவும் தண்டித்துத் தூக்குத் தண்டனை விதிக்கவும் போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும் என்னிடம் கூறினார். நான் முற்றும் குற்றமற்ற நிரபராதியாயிருந்தேன். ஆயினும் அந்தக் காலத்தில் போலீசார் எதையும் இஷ்டப்பட்டால் இஷ்டப்படி முடித்து விடுவார்களென்று நம்பினேன் அன்றையதினமே சில போலீஸ் உத்தியோகஸ்தர்கள் என்னிடம் வந்து ஒழுங்காக இரண்டு வேளைகளிலும் கடவுளைப் பிரார்த்தனை செய்யும்படி என்னைத்தூண்ட ஆரம்பித்தார்கள். நானோ அப்பொழுது ஒரு நாஸ்திகனாக இருந்தேன். சமாதானமும் சந்தோஷமும் குடிகொண்டிருக்கும் பொழுது மாத்திரம்தான் நான் நாஸ்திகவாதியென்று தற்புகழ்ச்சியடைந்து கொள்வதா அன்றி மிக்க கஷ்ட திசையிலும்தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருப்பதா என்பதைக் குறித்து எனக்குள்ளாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்று விரும்பினேன். நீண்ட நெடும் ஆலோசனைக்குப் பின்னர் எனது மனோரதம் நம்பிப் பிரார்த்தனை செய்யும்படி தூண்டக்கூடாதென்று முடிவு கட்டினேன். அம்முடிவின்படி நான்