பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

தான் கேட்கிறேன். இதைப்பற்றி உங்கள் கடவுள் யோசித்ததில்லையா? அல்லது மனிதவர்க்கத்தைச் சகிக்க முடியாத சித்திரவதைக்குள்ளாக்கி, அதன் பயனாகப் பெற்ற அனுபவத்தாலேதான் அவன் இவ்விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமா?

சிறைச்சாலை—தூக்குமேடை எப்படி வந்தது?

தரித்திரமும். மூடத்தனமும் தலைவிரித்தாடும் ஒரு தோட்டியின் குடும்பத்திலோ அன்றி, ஒரு சாமர் சாதிக்காரன் (தீண்டக் கூடாதவன்) குடும்பத்திலோ ஒரு மனிதன் பிறந்தால் அவன் கதி என்னாகும்? அவன் பரம ஏழை ஆகையால் படிப்பது அசாத்தியம். சாதித் திமிர் கொண்ட மேல் ஜாதிக்காரர்களால் அவன் வெறுத்து ஒதுக்கப்படுகிறான். அவனுடையமூடத்தனம், அவனுடைய தரித்திரம், அவன் நடத்தப்படுகின்ற தன்மை இவைகளெல்லாம் ஒன்றாகி சமுதாயத்தை வெறுக்கும்படியான நிலைமைக்கு கொண்டுவந்துவிடுகிறது. அதன் காரணமாக அவன் குற்றஞ் செய்கிறானென்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஜவாப்தாரி யார்? கடவுளா? அவனா? அல்லது சமுதாயத்தின் படித்த கூட்டத்தாரா? மமதையும், பேராசையும் உச்சிமுதல் உள்ளங்கால்வரையில் கொண்ட, குதிக்கும் ‘பிராமணர்களால்’ வேண்டுமென்றே நிர்மூடத்தனத்தில் ஆழ்த்தி அமுக்கப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் தண்டனைக்கு பொறுப்பாளி யார்? உங்களுடைய “பரிசுத்த ஞான நூற்க”ளாகிய வேதங்களிலிருந்து சில வாக்கியங்களை அவர்கள் கேட்டாலும், அவர்களுடைய காதில் ஈயத்தை காச்சி ஊற்ற வேண்டுமென்று தண்டனை விதித்ததற்கு அபராதம் செலுத்த வேண்டியவர்கள் யார்? அவர்கள் ஏதாவது குற்றஞ் செய்தால் யார் பொறுப்பேற்று தண்டனைக்குத் தலை கொடுப்பார்? என்று அன்புக்குரிய நண்பர்களே! மேற்கூறிய கோட்பாடுகளெல்லாம் விசேஷ சலுகையடைவோரின் கற்பனைகள், இக்கோட்பாடுகளின் உதவியால் அவர்கள் தாங்கள் பிறரிடமிருந்து பறித்துக்கொண்ட அதிகாரம், அய்ஸ்வர்யம், அந்தஸ்து முதலானவையென்று தீர்மானிக்கிறார்கள். ஆம்! உப்தன் சிங்கிளார் (Upton Sinclair) ஓரிடத்தில் எழுதுகிறார்: “ஒருவன் நித்தியத்து-