பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

முதற்பதிப்பின்
முன்னுரை

நான் நாத்திகன் — ஏன்? என்னும் இந்நூல் தோழர் சர்தார் கே. பகத்சிங் அவர்களால் லாகூர் சிறைக்கோட்டத்திலிருந்து அவரது தந்தையார்க்கு காவற்கூட அதிகாரிகளின் அனுமதியின் மீது எழுதப்பட்ட ஓர் கடிதமாகும். அக்கடிதத்தை தோழர் பகத்சிங் அவர்களின் தகப்பனார் லாகூரிலிருந்து வெளிவரும் “ஜனங்கள்” என்னும் ஆங்கிலக்கிழமை வெளியீட்டில் பிரசுரித்திருந்தார். அக்கடிதத்தை மொழிபெயர்த்து புத்தக ரூபமாய் வெளியிட வேண்டுமென்று பல தோழர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சென்னை மாகாண நாத்திக சங்க அமைச்சர் தோழர். ப. ஜீவானந்தம் அவர்களால் இனிய தமிழில் மொழிபெயர்த்து நமக்குக் கொடுக்கப்பட்டதாகும்.

தோழர் பகத்சிங் அவர்களின் அரசியல் கொள்கைகள் முழுவதும் நமக்கு உடன்பாடல்லவெனினும், கடவுள் சம்பந்தமாய் அவரது அபிப்பிராயத்தை பொதுவாய் தமிழ்நாட்டாரும் — சிறப்பாய் காங்கிரஸ்காரர்கள் என்போரும் தெள்ளிதில் அறிந்துய்யும் பொருட்டே இந்நூலை வெளியிட முன்வந்தோம்.

தனது பல நற்பணிகளுக்கிடையே மொழிபெயர்த்துக் கொடுத்த தோழர் ப. ஜீவானந்தம் அவர்கட்கு நமது நன்றியுரித்தாகுக.

ஈரோடு,
2 - 4 - 1934

பகுத்தறிவு
நூற்பதிப்புக் கழகத்தார்