பக்கம்:நாயகர் பெருமான்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

டிருந்தார்கள். பகைவர்களுக்குக் கையாட்களாகவும், முஸ்லிம்களிடையே பிரிவினை செய்பவர்களாகவும் விளங்கினார்கள். பலவகையான தந்திரங்களைக் கையாண்டும் இவர்களால் இஸ்லாத்தை அழிக்க முடியவில்லை.

இஸ்லாமியரை நிரந்தரமாய்ப் பிரித்துவைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், இக்கூட்டத்தார் ஒருமுறை தனிப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டினார்கள். தபூக் சண்டைக்குப் பெருமானவர்கள் புறப்பட்டுக் கொண்டிருக்கும் போது இக்கூட்டத்தினர் வந்து புதிய பள்ளி வாசலில் தொழுகை நடத்தி வைக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். சண்டை முடிந்தபின் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி நாயகமவர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள்.

ஆண்டவன் அருளால் பெருமான் அவர்கள் இப்புதிய பள்ளிவாசல் கட்டப் பெற்றதன் நோக்கத்தை அறிந்தார்கள். முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் சென்ற தீய கருத்தில் எழுப்பப் பெற்ற இப்பள்ளி வாசலைத் தீயிட்டுக் கொளுத்தி விடுமாறு பெருமானவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே அது எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.

அப்துல்லா இப்னு உபை என்பவன் இந்த முனாபிக்கீன்களின் தலைவனாக இருந்தான். அவன் கடைசியில் ஹிஜிரி ஒன்பதாம் ஆண்டில் கடுமையான நோய்க்கு ஆளானான். பிழைத்து எழக்கூடும் என்ற நம்பிக்கையே யில்லாத அளவு அவனை நோய் ஆட்-