பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 29 சீருற்ற சேரலாதனைக் காணவேண்டுமெனப், புலவர் விரும்பினார்; விரும்பிய வண்ணம் மதுரை யினின்றும் நீங்கிச் சேர நாட்டையடைந்தார்: அரசனைக் கண்டார். புலவர் பெருமையினை முன்னரே கேள்வியுற்றிருந்த சேரமான் அவரை நேரிற் கண்டதும், அகமலர முகமலர்ந்தான்; அவரைப் பற்பல கூறி உபசரித்தான்; நல் விருந்து செய்தான்; அவர் மனம் மகிழுமாறு பரிசில் நல்கினான். புலவர் பெருமகிழ்ச்சியுற்று, அவனது அரிய குணத்தை வியந்து கொண்டாடினர். பின்னர் புலவர் சூரிய மண்டலத்தை நோக்கி அதனை முன்னிலைப்படுத்திச் சேரமானது பெருமையைக் கூறி வியந்தார். "மிக்க செலவை யுடைய மண்டலமே! நீ பகற் பொழுதை நினக் கெனக் கூறுபடுப்பை திங்கள் மண்டலத்திற்கு முதுகிட்டுப் போவை, தெற்கும் வடக்கும் ஆகிய இடங்களில் மாறி மாறி வருவை; மலையின் கண்ணே வெளிப்படாது கரப்புை; பல கிரணங் . களையும் பரப்பி அகன்ற பெரிய ஆகாயத்தின் கண்ணும் பகற் பொழுதை விளக்குவை. எம். மரசன் சேரமான் உலகத்தைக் காக்கும் அரசர் பலரால் வழிபாடு சொல்லப்படுவன், நுகரும். இன்பத்தை விரும்பிப் பூமி பிற வேந்தருக்கும் பொது என்னும் வார்த்தைக்குப் பொறாதவன். வழங்கும் வண்மையுடையான்; வஞ்சியாது எதிர் நின்று கொல்லும் படையையுடையான். இத் தகைப் பெருமையினையுடைய அரசனை நீ