பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நாற்பெரும் புலவர்கள் சேரர் பெரும! தேன் ஒழுகும் பலாப் பழங் களை மிக்குடைய நாட்டையுடைய பாரிவேள் எனது ஆருயிர்த்தோழன். அவன் இறந்து பட்டனன். யான் நின் பால் வந்தேன். நீ எனக் களிப்பாய் என்று சொல்லி அளவு கடந்து உன்னை இல்லாத வார்த்தைகளால் புகழ்பவன் யான் அல்லன்; உண்மையையே எக்காலும் சொல்வேன்; அன்பு, அருள், அடக்கம், புலமை, அறிவு, ஈகை முதலாய நற்குணங்கள் பாரியிடத்து இருந்தன. அவை உன்னிடத்தேயும் இருக்கக் காண் கின்றேன். உலகம் எல்லாம் நின் புகழைப் பலபடக் கூறுகின்றது. - நின் பாசறையின் கலக்கத்தின் கண்ணே அதே புகழை நினக்கே சொல்ல யான் வந்தேன். கொற்ற வேந்தே! நின் பகைவர் நின்னைப் பணிந்து திறை தருவர். நினது கட்டளைப்படி நடப்பர்; நீ அவர்கட்கெல்லாம் அரசர்க்கு அரசனாக விளங்குகின்றாய். நின் பெருமை செப்பவும் எளிதோ? நினது அகன்ற மார்பு வீரலட்சுமி தங்கப் பெற்றது. நீ, பொய்ச் சொற்களைச் சொல்லி அறியாய். மேன்மை பொருந்திய இக்குணங்கள் நினக்கு இயற்கை யாகவே அமைந்துள்ளன. போரில் வெல்லும் தலைவ! முன் பிறர்பால் வெற்றிபெற்று நினக்கு அழிந்த மன்னர் நின்னோடு பகைமாறித் தாழ்வு கூறா நிற்ப, அதற்கு ஏற்ப நீயும் நின் பெருமையும். கண்ணோட்டமும் ஆகிய நுகங்கொண்டு வெற்றி,