பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நாற்பெரும் புலவர்கள் புலிக் கூட்டத்தில் சிங்கம் பாய்ந்ததைப் போலப் 'கையரசர் சேனையுட் புகுந்து செங்குட்டுவன் தனது வெற்றியை நிலை நாட்டினன். சோழ பாண்டிய மன்னர்கள் செங்குட்டுவன் மீது பொறாமை கொண்டு கொங்கர் செங்களம் என்னும் இடத்து இவனுடன் போர் புரிந்தனர். அப்போரில் செங்குட்டுவனே வெற்றி பெற்றான். கடலை அரணாகக் கொண்டு தன்னை எதிர்த்த பலரை நம் சேரர் பெருமான் கடலில் தானையைச் செலுத்தித் தன் வெற்றியைப் புகழ்பெற நாட்டினன். தனக்கும் தனது நண்ட ன்ான அறுகை என்னும் அரசனுக்கும் பகைவ னான பழையன்' என்பானைச் செங்குட்டுவன் போரில் தோற்கடித்து வெற்றி மாலை குடினன். செங்குட்டுவனது அம்மானான சோழ அரசன் இறந்ததும், அவன் மகன் பட்டத்தை அடைந்த போது, அது பொறாமல் சோழ வமிசத்தவர் ஒன்பதின்மர் பெருங்கலகம் விளைத்து நாட்டைக் கலைக்க, அவர்கள் அனைவரையும் செங்குட்டுவன் நேரிவாயில் என்ற இடத்தில் நடந்த பெரும் போரில் தோற்கடித்துத் தன் மைத்துனனைப் பட்டத்தில் வைத்தனன். - இங்ங்னம் செங்குட்டுவன் வெற்றி வேந்த னாய் வாழுங் காலத்தில், கோவலன் மனைவி யான கண்ணகி, தன் கணவனைக் கொல்லச் செய்த பாண்டியனைப் பழிக்குப் பழி வாங்கி,