பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. நாற்பெரும் புலவர்கள். சேரமன்னவன் இமயமலையையும் குமரியாற். றையும் வடக்கு, தெற்கு எல்லைகளாகக் கொண்ட நாடுகள் பலவற்றையும், அவற்றை ஆண்ட அரசர் களோடு பொருது அழித்தான் என்று புகன்றுள் ளார். பரணர் செங்குட்டுவனின் கொடையையும், அக்கொடைககு வருவாயாகிய பகைவரைக் கோற. லையும் உடன் கூறிப் பாடியுள்ளார். இங்ங்னம் பத்துப் பாக்களால் தன்னைப் பாடி மகிழ்வித்த பரணரைச் செங்குட்டுவன் புகழ்ந்து, அவருக்குப் பரிசாக உம்பற் காட்டு வாரியத்தைக் கொடுத்து, தன் மகனும் இளவரசனுமான குட்டுவஞ் சேரல் என்பானுக்குக் கல்வி கற்பிக்கு மாறு அவரிடமே அவனை அடைக்கலமாக விட்ட னன். பரணர் பெரிதும் மகிழ்ந்து, அரசனுடனே அரண்மனையில் இருந்து கொண்டு, குட்டுவஞ். சேரலுக்குத் தமிழ்க் கல்வியினைக் குறைவறப் போதித்து வந்தார்; இடையிடையே தமது இனிய பாக்களால் செங்குட்டுவனைக் களிப்பித்து. வநதாா இவ்வாறு பெருந்தமிழ்ச் செல்வராய் விளங்கி மேம்பட்ட புகழோடு வாழ்ந்து, அரசர்கள் மதிக்கத். தக்க அறிவும் ஆற்றலும் அமையப்பெற்று, தமிழ கத்துக்கே சிரோமணியாயிருந்த பரணர், முடிவில், நாமகள் வருந்த மண்ணகம் நீத்து விண்ணகம் புக்கனர். - - - * * ~ *