பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நாற்பெரும் புலவர்கள் இயல்பினையுடைய பாவை போல-இளமகள் என்னெஞ்சினின்றும் நீங்காள் எனத் தலைவன் தலைவியைப் பற்றிக் கூறுமுகத்தால் கொல்லிப் பாவையை உவமித்தார். புலவர், கொண்கானத்து முன்பிருந்த நன்னன்’ என்னும் சிற்றரசனது கொடை முதலியனவும், அவன் கொடுஞ்செயல்களும், அவனோடு சேரமான் போர்செய்ததும், சேரன் சேனாபதி ஆய்எயினனை நன்னன் சேனாபதி மிஞரிலி என்பான் கொன்ற தும் பிறவும், நன்னனது பாழியில் பொருள் சேமித்' துக் காவலோம்பியதும் விரித்துக் கூறியுள்ளார். ... •' "பிண்டன்' முதலிய பகையரசர் அழகு. பொருந்திய பிரிந்த பிடரிமயிரையும் விரைந்தசெலவினையும் உடைய நல்லகுதிரைப் படைகளை உடையவர்கள். அவர்களை வேற்படையை உடைய நன்னன், போரிலே தோற்றோடச் செய்தான். அவ்வரசர்களின் உரிமை மகளிரைப் பற்றி வந்து அவர் தலையை அழித்து, அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றினாலே அப்பகை வரின் சேனையைப் பிணித்தனன்" என்று கூறுவதன் மூலம் நன்னனின் கொடுஞ் செயலைப் பரணர் படம் தீட்டிக் காட்டுகின்றார்; இங்ங்னமே ஒவ்வொரு பாட்டிலும் பிற செய்திகளைக் குறித்துச் செல்கின்றார். பரணர் வெளியன் தித்தனது கானலம் பெருந்துறையும், பிண்டன் தோல்வியும், நள்ளியின் சோலைச் சிறப்பும், ஆய்