பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நாற்பெரும் புலவர்கள் நக்கீரரும் குயக் கொண்டானும் நக்கீரர் மதுரையில் வாழுநாளில் கொண்டான்" என்ற பெயருடைய குயவன் ஒருவன் இருந்தான். அவன் ஆரிய மொழியில் பெரும் புலமை எய்தினவன்; மிக்க செருக்குற்றவன்; தன்னே ரில்லாத் தலைவன் என்று தன்னை நினைத்துக் கொண்டவன். அவன் எ ப் போது ம் தமிழ் மொழியினை இழித்துக் கூறுவதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்தான். அவன் வன்மை யுற்றவன் என்று எண்ணிய மக்கள் பலர் அவன் அகந்தையை அடக்க வன்மையற்று இருந்தனர். அவன் ஒரு நாள் பட்டி மண்டபம் ஏறி, "வட மொழி மிக்க சிறப்புடையது; தமிழ் அத்துணைச் சிறப்புடையதன்று” என்று தமிழை இழித்துக் கூறினன். அப்போது அவ்வழியே சென்ற நக்கீரனார், 'வடமொழியே தமிழைச் சிறப்புடைய மொழியென ஒப்புக் கொள்ளுகின்றது; தமிழ்ை. இகழ்ந்துரைத்த நின்னை வடமொழியாலே இறக்கு மாறு கூறுகிறேன்; அது நின்னை இறக்கச் செய்யா தாயின், தமிழ் இழிந்ததே என்று கொள்கை' என்று கூறி, ... - 'முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி! பரண கபிலரும் வாழி!-அரணிலா r ஆனந்த வேட்கையான் வேட்கோக் * குயக்கொண்டான் - ஆனந்தஞ் சேர்க்சுவா கா - என்று பாடினார். • *