பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நாற்பெரும் புலவர்கள் வராய், மதுரையை அரிதின் நீங்கி வடக்கு நோக்கிச் சென்றார்; வழியில் பல தளிகளைக் கண்டு தரிசனை செய்தார்; பல நாட்கள் வழி நடந்து இமய வெற்பின் சாரலை அடைந்தார். அடைந்தவர், அங்கோர் ஆலவிருட்சத்தையும் நன்னீர்ப் பொய்கையையும் கண்டார்; கண்டு, உள்ளங் குளிர்ந்தவராய் அக்குளத்தின் கரையில் அமர்ந்து நிட்டையில் இருந்தனர். அவ்வமயம், ஆல விருட்சத்தின் இலை ஒன்று நீரினும் நிலத்தினும் பொருந்த விழுந்தது. விழுந்த அவ்விரு பகுதிகள் முறையே மீனும் பறவையுமாகி ஒன்றை ஒன்று ஈர்த்தன. அதைக் கண்ட நக்கீரர் இரக்கம் மேலிட்டவராய், பறவையையும் மீனையும் பிரித்து விட்டார். உடனே அவை அவ்விடத்தே மாண்டன. உடனே அங்கொருபூதம் தோன்றி, "நக்கீர! முருகப் பெருமான் விரும்பி உறையும் இவ்விடத் தில் நீ கொலைப் பாதகம் செய்தனை” என்று கூறி, அவரைத் தூக்கிச் சென்று ஒரு குகையில் அடைத்துச் சென்றது. குகையில் அடைப்புண்ட நக்கீரர் பேரறிவாளி . யாதலின், “கந்தனைப் பாடாக் குறையால் நேர்ந்த, விபத்து இது" என்பதை உணர்ந்தார். உடனே அவர் குமரனைக் குறித்த திருமுருகாற்றுப்படை என்பதனைப் பாடினர். அவ்வளவில் குமரன் அவர் முன்னபுத் தோன்றி, "அன்ப! நீ வேண்டுவது யாது?" என நக்கீரர், "அண்ணலே. கைலை காணின் எனக்குற்ற குட்ட