உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


குறைய ஒருவனுக்கு ஒருவர் உதவிசெய்து கொண்டுதான் வாழவேண்டும். இல்லாதவர் இருப்பவனைக் கேட்டுப் பெறுவது தவறாகாது. அவசியம்; இதில் ஆவேசப்படத் தேவை இல்லை, அவசரத்திற்கு உள்ளவனைக் கேட்பது இழிவு அன்று; ஆனால் அந்த மடையன் அதை உணர்வது இல்லை; 'ஈக' என்று கேட்டுவிட்டாலே ஈனமாகப் பார்க்கிறான். செல்வச் செருக்கு அவன் ஆணவத்தைத் துரண்டுகிறது. அவன் நல்ல குணங்கள் மறைகின்றன. அடுத்த வீட்டுக்காரனாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் தவிர்ப்பது நல்லது; உறவு கெடாது. ஏதோ பகை வெறுப்பு இல்லாமல் வாழ முடியும் கேட்பது தவறு அன்று. தராதவன் அவன் கருமி, அதனால் விலகி நிற்பது நல்லது.

வைர அட்டிகை கதை தெரியுமா? திருமணத்துக்குச் செல்லப் பக்கத்து வீட்டுக்காரியிடம் வைரச்சரடு இரவல் கேட்டாள். அங்கே அதைத் தொலைத்து விட்டாள். என் செய்வாள்? கடன் உடன் வாங்கிப் புதிய வைரச்சரடு வாங்கி எதுவும் விளக்காமல் பக்கத்துவிட்டுக்காரியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டாள். இந்தக் கடனுக்காகக் காலமெல்லாம் உழைத்தாள், ஓடாய்த் தேய்ந்தாள். பக்கத்து வீட்டுக்காரி கேட்டாள். 'நீ பேரழகியாக இருந்தாய், இன்று சீர் கெட்டு விட்டாயே ஏன்?' என்று விசாரிக்கிறாள். "எல்லாம் வைரச்சரடுதான்" என்று விளக்கம் கூறினாள்.

"அடிப்பாவி அது வைரம் அன்று; வெறும் போலிக் கல்" என்றாள். அதிர்ச்சி ஏற்பட்டது. "இரவல்

9